ETV Bharat / bharat

75ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்: குவாலியர் அமர் சந்திர பந்தியா! - ஜான்சி ராணி

1793ஆம் ஆண்டு ராஜஸ்தானின் பிகானேரில் பிறந்த அமர் சந்திர பந்தியாவுக்கு சிறுவயதில் இருந்தே நாட்டின் கௌரவத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தீவிர ஆசை இருந்தது. இன்றும் குவாலியரின் புல்லியன் மார்க்கெட்டில் அதே மரத்தடியில் அமர் சந்திர பந்தியாவின் சிலை உள்ளது. நாட்டின் சுதந்திரத்திற்காக அவரது இறுதி தியாகத்தை ஒவ்வொரு வழிப்போக்கருக்கும் நினைவூட்டுகிறது.

Amar Chandra Banthia
Amar Chandra Banthia
author img

By

Published : Nov 20, 2021, 5:02 AM IST

Updated : Nov 20, 2021, 6:35 PM IST

குவாலியர் : ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டுக்கொண்டிருந்த நேரத்தில் பலரும் வெள்ளையருக்கு எதிராக ஆயுதப் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டங்களை மறைமுகமாக ஆதரித்து போராளிகளுக்கு பொருள் உள்ளிட்ட உதவிகள் செய்தவர் அமர் சந்திர பந்தியா.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது தனக்கான வழி அல்ல என்று தனது சகாக்களிடம் கூறினாலும் சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்களிப்பை அளித்தவர் அமர் சந்திர பந்தியா. இவர் சிந்தியா வம்சத்தால் ஆளப்பட்ட குவாலியர் சமஸ்தானத்தின் பொருளாளராக இருந்தவர் ஆவார்.

1793ஆம் ஆண்டு ராஜஸ்தானின் பிகானேரில் பிறந்த அமர் சந்திர பந்தியாவுக்கு சிறுவயதில் இருந்தே நாட்டின் கௌரவத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தீவிர ஆசை இருந்தது.

அவரது தந்தை பிகானேரில் வியாபாரம் செய்து வந்தவர். இவரது குடும்பம் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக குவாலியருக்கு மாற வேண்டியிருந்தது.

அப்போதைய குவாலியரின் மகாராஜா அவரது குடும்பத்திற்கு அடைக்கலம் அளித்து, சமஸ்தானத்தில் தனது தொழிலைத் தொடருமாறு அறிவுறுத்தினார். இந்நிலையில் அவரை சமஸ்தானத்தின் பொருளாளராக மன்னர் நியமித்தார்.

அந்நேரம், 1857 ஆம் ஆண்டில் ஜான்சியின் ராணி லட்சுமிபாய் பிரிட்டிஷ் படைகளை நேருக்கு நேர் எதிர்க்க முடிவு செய்திருந்தார். ஜான்சிக்கு அருகில் ஆங்கிலேயர்களுடன் இணைந்த அனைத்து சமஸ்தானங்களையும் அவள் தாக்கினாள்.

75ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்: குவாலியர் அமர் சந்திர பந்தியா!

அவள் குவாலியரைக் கைப்பற்றினாள். எனினும் ஜான்சி ராணி லட்சுமி பாய் எதிர்பார்த்த பொருள் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரின் இராணுவத்துக்கு அமர் உதவி செய்ய முன்வந்தார். குவாலியரின் கருவூலம் முழுவதையும் ராணி லட்சுமிபாயிடம் ஒப்படைத்தார்.

இந்த விஷயம் ஆங்கிலேயர்களுக்கு தெரியவர அமர் சந்திர பந்தியாவுக்கு மரண தண்டனை விதித்தனர். இதையடுத்து அவர் சரஃபா பஜாரில் உள்ள மரத்தில் தூக்கிலிடப்பட்டார். ஆங்கிலேயர்கள் அவரது உடலை மூன்று நாள்கள் தூக்கில் தொங்க வைத்தனர்.

இன்றும் குவாலியரின் புல்லியன் மார்க்கெட்டில் அதே மரத்தடியில் அமர் சந்திர பந்தியாவின் சிலை உள்ளது. நாட்டின் சுதந்திரத்திற்காக அவரது இறுதி தியாகத்தை ஒவ்வொரு வழிப்போக்கருக்கும் நினைவூட்டுகிறது.

இதையும் படிங்க : இந்திய விடுதலைப் போராட்டத்தின் திருப்புமுனை ஜாலியன் வாலாபாக்!

Last Updated : Nov 20, 2021, 6:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.