பெங்களூரு : கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பா, தற்போதைய முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் புதிய அமைச்சரவையில் தனது கூட்டாளிகளுக்கு பதவிகளைப் பெற கடுமையாக வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், எடியூரப்பாவின் எதிரிகளுக்கு புதிய அமைச்சரவையில் பதவி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
எடியூரப்பா பதவி விலகியது உமேஷ் கத்தி மற்றும் முருகேஷ் நிரானி போன்ற அவரது நெருங்கிய கூட்டாளிகளுக்கு கடுமையான வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஹோட்டல் ஒன்றில் நடந்த தனியார் நிகழ்ச்சியொன்றில், பி.எஸ். எடியூரப்பாவின் நெருங்கிய கூட்டாளியான ரேணுகாச்சார்யாவும் கலந்து கொண்டடுள்ளார்.
மேலும், எடியூரப்பாவை பகிரங்கமாக விமர்சித்த எம்எல்ஏ பசனகவுடா பாட்டீலுக்கு அமைச்சரவையில் இடம் கிடைப்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளது.
எம்எல்ஏ அரவிந்த் பெல்லட் எடியூரப்பாவை வெளிப்படையாக விமர்சிக்கவில்லை. எனினும் அவர் தனித்து காணப்படுகிறார். ஆகையால் இவருக்கும் அமைச்சரவையில் இடம் கிடைப்பது சந்தேகமே.
அதேபோல் எடியூரப்பாவின் முன்னாள் அபிமானியான சிபி யோகேஷ்வர் விஷயத்திலும் எடியூரப்பா எதிர்ப்பு தெரிவிப்பார் என்றே தெரிகிறது.
இதையும் படிங்க : எடியூரப்பா ராஜினாமா- உருக்கமான உரை!