ETV Bharat / bharat

”சரக்கு ரயில்களை மட்டும் அனுமதிப்போம்” - பஞ்சாப் விவசாயிகள்

சண்டிகர் : வேளாண் சட்டங்களுக்கு எதிராக ரயில் தண்டவாளங்களில் மறியல் போராட்டம் நடத்தி வரும் பஞ்சாப் விவசாயிகள், சரக்கு ரயில்கள் மட்டும் செல்ல அனுமதிப்போம் எனத் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் சரக்கு ரயில்
பஞ்சாப் சரக்கு ரயில்
author img

By

Published : Nov 4, 2020, 10:46 PM IST

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் விவசாயிகள் சக்கா ஜாம் (chakka jam) எனும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி நெடுஞ்சாலைகள், ரயில் தண்டவாளங்களை மறித்துப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 30 விவசாயிகள் அமைப்பைச் சார்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ரயில் தண்டவாளங்களில், கடந்த சில நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பிற மாநிலங்களில் இருந்து அத்தியாவசியப் பொருள்கள், அனல்மின் நிலையத்துக்குத் தேவையான நிலக்கரி, உரங்கள் ஆகியவற்றை ஏற்றிவந்த சரக்கு ரயில்கள் மாநிலத்துக்குள் நுழைய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் மின்தட்டுப்பாடு உள்ளிட்ட பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், தண்டவாளங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டாலும், வரும் 20ஆம் தேதி வரை சரக்கு ரயில்கள் மட்டும் பயணிக்க அனுமதிப்போம் எனத் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, விவசாயிகளின் போராட்டத்தை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

இதையும் படிங்க: ஊதிய உயர்வு அளிக்க உள்ள 87% இந்திய நிறுவனங்கள்: கணக்கெடுப்பில் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.