ETV Bharat / bharat

’தடுப்பூசி செலுத்திக்கொள்ள மருத்துவப் பணியாளர்களுக்கு தயக்கமா...’ தரவுகள் சொல்வது என்ன?

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ள போதிலும், மருத்துவர்கள் உள்பட நாட்டின் சுகாதாரப் பணியாளர்களில் 66 விழுக்காட்டினருக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

Why only 66 percent of healthcare workers are vaccinated in India?
தடுப்பூசி செலுத்திக்கொள்ள மருத்துவர்களுக்குத் தயக்கமா? தரவுகள் சொல்வது என்ன?
author img

By

Published : May 21, 2021, 6:36 PM IST

டெல்லி: இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள போதிலும், மருத்துவர்கள் உள்பட நாட்டின் சுகாதாரப் பணியாளர்களில் 66 விழுக்காட்டினருக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

கரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறித்த சந்தேகம் இத்தகைய மோசமான விழுக்காட்டிற்கு காரணமாக இருக்கலாம் என இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் செயலாளர் ஆர்.வி.அசோகன், நமது ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேசும்போது தெரிவித்தார்.

”கரோனா நோயாளிகள் மத்தியிலே இயங்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்கள், ஆஷா ஊழியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவே மத்திய அரசு முன்னுரிமை தந்தது.

அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 1.64 கோடி சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு மட்டுமே தற்போது கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், 0.67 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியையும், 0.97 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியையும் எடுத்துக் கொண்டுள்ளனர்.

மேலும், 2.29 கோடி முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், 0.83 கோடி பேர் இரண்டாம் தவணை, 1.46 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியையும் எடுத்துள்ளனர்.

இதுவரை மூன்று கோடி மருத்துவப் பணியாளர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தியிருப்பதைப் பார்கையில், மருத்துவப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் மத்திய அரசின் பணி தொடர்ந்து பின்தங்கிய நிலையில் இருப்பதையே காட்டுகிறது.

மருத்துவப் பணியாளர்கள் உள்பட இதுவரை 14.07 கோடி பேர் (இரண்டாம் தவணை 2.74 கோடி பேர், முதல் தவணை 11.33 கோடி பேர்) கரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ள மருத்துவர்கள் தயங்குவதற்கு காரணம், தடுப்பூசியின் செயல்திறன் குறித்த தரவுகள் இல்லாததே என்றும், தற்போது, தடுப்பூசியின் செயல்திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றும் நம்மிடம் பேசிய மூத்த சுகாதார வல்லுநர் சுனில் கார்க் தெரிவிக்கிறார்.

மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு என்ற பிரச்னை இல்லை எனக் குறிப்பிடும் அவர், மத்திய அரசின் முன்னுரிமைப் பட்டியலில் அவர்கள் இருக்கிறார்கள் என்றும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் அவர்களிடம் இருக்கும் தயக்கமே இந்த மோசமான விழுக்காட்டிற்கு காரணம் என்றும் தெரிவிக்கிறார்.

இதையும் படிங்க: தோப்பூர் கரோனா சிகிச்சை மையம் திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.