ETV Bharat / bharat

கேரள லாட்டரி சீட்டுகள் - யார் வாங்கலாம்? எங்கு வாங்கலாம்? - ஆன்லைனில் லாட்டரி சீட்டு விற்பனை

கேரள லாட்டரி சீட்டுகளை வாங்க நாடு முழுவதும் உள்ள மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், லாட்டரி சீட்டுகளை வாங்கவும், விற்கவும் கேரள அரசு சில விதிமுறைகளை வைத்துள்ளது.

Kerala
Kerala
author img

By

Published : Sep 21, 2022, 9:59 PM IST

திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரியில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் 25 கோடி ரூபாயை வென்றார். இந்த செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த கேரள லாட்டரி சீட்டுகள் நாடு முழுவதும் உள்ள மக்களிடையே லாட்டரி குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. பிற மாநிலங்களில் உள்ள மக்களும் கேரள லாட்டரி சீட்டுகளை வாங்க முடியுமா? என்று யோசிக்கிறார்கள். இந்த நிலையில், கேரள லாட்டரி சீட்டுகளை வாங்குவதற்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்...

பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கேரள லாட்டரி சீட்டுகளை வாங்கலாமா?

தற்போதுள்ள லாட்டரி ஒழுங்குமுறை சட்டத்தின்படி, கேரள லாட்டரி சீட்டுகளை கேரளாவுக்கு வெளியே விற்க முடியாது. இருப்பினும், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கேரளாவுக்கு சென்று சீட்டை வாங்கலாம். அவர்கள் பரிசுத் தொகையை வென்றால், தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து பரிசுத் தொகையைப் பெறலாம்.

லாட்டரி சீட்டை ஆன்லைனில் வாங்க அனுமதி உள்ளதா?

லாட்டரி விதிகளின்படி, அசல் லாட்டரி சீட்டை சமர்ப்பித்தே பரிசைப் பெற முடியும். அதனால் ஒரிஜினல் லாட்டரி சீட்டு மிகவும் முக்கியம். ஆன்லைனில் லாட்டரி சீட்டு வாங்குவது சட்டவிரோதமானது. லாட்டரி முகவர்கள் சிலர் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் விற்பனை செய்கின்றனர். இதற்கு சட்டப்பாதுகாப்பு இல்லை. இந்த குழுக்கள் மூலம் லாட்டரி சீட்டு வாங்கி, அதனால் பிரச்சினைகள் ஏதேனும் ஏற்பட்டால், அதற்கு அரசு பொறுப்பேற்காது.

லாட்டரி மூலம் கிடைக்கும் பரிசைப் பெற என்னென்ன ஆவணங்கள் தேவை?

1. பரிசு வென்ற அசல் லாட்டரி சீட்டு

2. படிவம் எண் VIIIஇல் முத்திரையிடப்பட்ட ரசீது

3. அட்டஸ்டட் செய்யப்பட்ட சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ (2)

4. இருபுறமும் அட்டஸ்டட் செய்யப்பட்ட டிக்கெட்டின் நகல்

5. அட்டஸ்டட் செய்யப்பட்ட பாஸ்போர்ட் / ரேஷன் கார்டு / வாக்காளர் அடையாள அட்டை / ஓட்டுநர் உரிமம் நகல்

6. வங்கி மூலம் லாட்டரி சீட்டை ஒப்படைக்கும் போது, பரிசு வென்றவரின் அடையாள அட்டை, பரிசுத்தொகையை வழங்கும் வங்கியின் சான்றிதழ், பரிசுத்தொகையை பெறும் வங்கியின் சான்றிதழ்.

கேரள அரசிடமிருந்து எத்தனை லாட்டரிகள் உள்ளன?

கேரள அரசு ஒவ்வொரு நாளுக்கும் ஒரு லாட்டரி சீட்டை வைத்துள்ளது.

திங்கட்கிழமை அக்சயா, செவ்வாய்க் கிழமை காருண்யா, புதன் காருண்யா பிளஸ், வியாழன் நிர்மல், வெள்ளிக்கிழமை ஸ்த்ரீசக்தி, சனிக்கிழமை வின்வின் (WinWin), ஞாயிறு ஃபிப்ட்டி ஃபிப்ட்டி (Fifty Fifty) என லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டுகின்றன. இவற்றில் முதல் பரிசுத் தொகை ஒரு கோடி ரூபாய்.

50-50 லாட்டரி சீட்டு
50-50 லாட்டரி சீட்டு

இந்த தினசரி லாட்டரிகள் இல்லாமல், அதிக பரிசுத் தொகைகளுடன் ஆறு பம்பர் லாட்டரிகளையும் கேரள அரசு வைத்துள்ளது.

நிர்மல் லாட்டரி சீட்டு
நிர்மல் லாட்டரி சீட்டு

பருவமழை பம்பர், பூஜை பம்பர், கோடை பம்பர், ஓணம் பம்பர், விஷு பம்பர் மற்றும் கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் ஆகிய பம்பர் லாட்டரிகள் உள்ளன.

இவற்றில் பெரும்பாலானவை குறிப்பிட்ட சமூக நோக்கங்களுடன் வெளியிடப்படுகின்றன. இந்த லாட்டரிச் சீட்டு விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானம் குறிப்பிட்ட சமூக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.

காருண்யா லாட்டரி சீட்டு
காருண்யா லாட்டரி சீட்டு

எடுத்துக்காட்டாக, காருண்யா லாட்டரி சீட்டு மூலம் கிடைக்கும் வருமானம் ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவ உதவி வழங்கவும், ஸ்ரீசக்தி லாட்டரி சீட்டு வருமானம் பெண்கள் நலனுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த லாட்டரி அச்சிடுதல் மற்றும் விற்பனைக்கான அதிகாரம் யாருக்கு உள்ளது?

கேரள அரசின் லாட்டரி துறை, லாட்டரி சீட்டுகளை அச்சடித்து விற்பனை செய்கிறது. அரசாங்க அச்சகத்தில் சீட்டுகள் அச்சிடப்படுகிறது. அதில், வரிசை எண், சீட்டின் விலை, பரிசுத் தொகை விவரங்கள் போன்ற விவரங்கள் இருக்கும். பாதுகாப்புக்காகவும், மோசடிகளை தடுக்கவும் ஒவ்வொரு சீட்டிலும் பார்கோடு அச்சிடப்பட்டுள்ளது.

அக்சயா லாட்டரி சீட்டு
அக்சயா லாட்டரி சீட்டு

ஒவ்வொரு முகவருக்கும் விற்கப்படும் சீட்டுகளின் விவரங்கள் லாட்டரி துறையால் பாதுகாக்கப்படும். விற்பனையாகாத டிக்கெட்டுகள் குறித்த விவரங்களை முகவர்கள் குலுக்கல் தேதிக்கு முன்னதாக லாட்டரி துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த சீட்டுகள் குலுக்கலில் இருந்து நீக்கப்படும்.

பரிசுத் தொகையை எப்படி வாங்க வேண்டும்?

திருவனந்தபுரத்தில் லாட்டரி சீட்டு குலுக்கல் நடைபெறுகிறது. 5,000 ரூபாய் வரையிலான பரிசுத் தொகையை லாட்டரி முகவர்களிடமிருந்து நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை மாவட்ட லாட்டரி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

வின் வின் லாட்டரி சீட்டு
வின் வின் லாட்டரி சீட்டு

அதைவிட அதிகளவு பரிசுத் தொகையை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகளில், அசல் லாட்டரி சீட்டு மற்றும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம். வருமான வரி, ஏஜென்ட் கமிஷன் போக மீதமுள்ள தொகை பரிசுப் பெற்றவருக்கு வழங்கப்படும். குலுக்கல் நடைபெற்ற 90 நாட்களுக்குள், பரிசு பெற்ற சீட்டை சமர்ப்பித்து பரிசை பெற்றுக் கொள்ள வேண்டும். 90 நாட்களுக்குப் பிறகு, சீட்டு செல்லாததாகக் கருதப்படும்.

இதையும் படிங்க: மகளின் உண்டியல் பணத்தில்தான் லாட்டரி சீட்டை வாங்கினேன் - லாட்டரியில் ரூ.25 கோடி வென்ற அனூப் பேட்டி...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.