ETV Bharat / bharat

இந்தியா திரும்பியதும் பிரதமருடன் ஐஸ்கிரீம் சாப்பிடவுள்ள பி.வி. சிந்து

author img

By

Published : Aug 2, 2021, 8:20 AM IST

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பி.வி. சிந்து இந்தியா திரும்பியவுடன் பிரதமர் மோடியுடன் ஐஸ்கிரீம் சாப்பிடும் வாய்ப்பு இருப்பதாக அவரது தந்தை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

பிரதமருடன் ஐஸ்கிரீம் சாப்பிடவுள்ள பி.வி. சிந்து

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் சீனாவின் ஹி பிங் ஜியோவை வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதனையடுத்து ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை பி.வி. சிந்து படைத்துள்ளார்.

இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் சிந்துவுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

இது குறித்து பேசிய சிந்துவின் தந்தை ரமணா, "சிந்து இந்தியா திரும்பியவுடன் பிரதமர் மோடியுடன் சில மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்துகொள்வார் என நம்புகிறோம். அவர் பிரதமருடன் ஐஸ்கிரீம்கூட சாப்பிடலாம்" என்றார்.

முன்னதாக கடந்த ஜூலை 13ஆம் தேதி, ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளவிருந்த வீரர்களிடம் ஆன்லைன் வாயிலாகப் பேசிய பிரதமர், ஒலிம்பிக்கில் ஐஸ்கிரீம் தடைசெய்யப்பட்டது குறித்துக் கேட்டறிந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க:‘சமூகநீதி என்பதற்கான இலக்கணம் பிரதமர் மோடியின் அரசுதான்’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.