டெல்லி: பிரதமர் மோடி உரையை தொடங்கியதும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு விசாரணை நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. எதிர்க்கட்சி எம்.பிக்களின் அமளிக்கு இடையே தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி தொடர்ந்து பேசினார்.
மாநில அரசுகளுக்கு நாங்கள் தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக காங்கிரஸ் கூறுகிறது. ஆனால், காங்கிரஸ் தனது ஆட்சி காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை 90 முறை கவிழ்த்துள்ளது. இந்திராகாந்தி சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி 50 முறை அரசாங்கங்களை கவிழ்த்துள்ளார். தமிழ்நாட்டில் கருணாநிதி, எம்.ஜி.ஆரின் ஆட்சியை காங்கிரஸ் கலைத்துள்ளது. ஆனால், திமுக அவர்களோடு கூட்டணி வைத்துள்ளனர். எம்.ஜி.ஆரின் ஆன்மா இதனை பார்த்து நிச்சயம் வருத்தம் அடையும்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத்பவாரின் ஆட்சியை காங்கிரஸ்தான் கலைத்தது. அப்போது அவர் இளம் முதலமைச்சராக இருந்தார். கேரளாவில் சிபிஐ(எம்) ஆட்சியை நேரு கலைத்தார். ஆந்திராவில் என்.டி.ஆரின் ஆட்சியை கலைக்க காங்கிரஸ் முயற்சித்தது. மாநிலக் கட்சிகளின் தலைவர்களுக்கு பல்வேறு பிரச்னைகளை கொடுத்தது காங்கிரஸ் கட்சிதான். இந்த நாடு எந்த ஒரு குடும்பத்தின் சொத்தும் கிடையாது.
ஒவ்வொரு ராஜ்பவனும் காங்கிரஸ் கட்சி அலுவலகமாக மாற்றப்பட்டதை அப்போதைய செய்தித்தாள்கள் குறிப்பிட்டுள்ளன. 350-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பாதுகாப்பு துறையில் நுழைந்துள்ளன. அரசு திட்டங்களில் இருந்த சமஸ்கிருதத பெயர்களால் சிலருக்கு சிக்கல்கள் இருந்தன. காந்தி - நேரு என குடும்ப பெயர்களில் 600 திட்டங்கள் இருந்ததாக நான் செய்தியில் படித்தேன். அவர்களுடையை தலைமுறையை சேர்ந்தவர்கள் ஏன் நேருவின் பெயரை குடும்பப் பெயராக வைக்கவில்லை.
நேருவின் பெயரை எங்கேயாவது நாங்கள் குறிப்பிட மறந்துவிட்டால் காங்கிரசார் அப்செட் ஆகிவிடுகிறார்கள். நேரு மிகப்பெரிய மனிதர். பிறகு ஏன் அவரது பெயரை யாரும் குடும்பப் பெயராக பயன்படுத்துவதில்லை. நேரு பெயரை பயன்படுத்துவதில் உங்களுக்கு என்ன அவமானம்? பயம்? பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டங்களுக்கு எங்கள் அரசு முன்னுரிமை வழங்கியுள்ளது. கர்ப்பிணிகளுக்கு அவர்கள் வங்கிக் கணக்கில் நேரிடையாக பணம் கிடைக்கும் திட்டங்களை நாங்கள் செய்துள்ளோம். இதனால் தாய் சேய் இருவருக்குமான ஊட்டச்சத்து கிடைக்கும்.
தொழில்நுட்பத்தை நமது நன்மைக்காக பயன்படுத்தியுள்ளோம். மோடி என் தொகுதிக்கு வருகிறார் என கார்கே ஜி கூறினார். ஆனால், நான் வேலை நிமித்தமாக கர்நாடகா வந்தேன். 1.7 கோடி மக்கள் ஜந்தன்வங்கி கணக்கை பெற்றுள்ளனர், அதேநேரம் காங்கிரஸின் கணக்கை மக்கள் மூடிவிட்டனர். முந்தைய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தண்ணீர் தொட்டியை திறந்து வைக்க சென்றது செய்தியாக வந்திருந்தது. ஆனால் நாங்கள் மூன்று கோடி மக்களுக்கு தண்ணீர் வழங்குவதை உறுதி செய்துள்ளோம்.
பிரச்சினைகளை தீர்க்கும் பொறுப்பு அவர்களுக்கும் இருந்தது. ஆனால் அவர்களின் முன்னுரிமையும் நோக்கங்களும் மாறுபட்டிருந்தன. நாங்கள் அடிப்படை பிரச்சினையில் கவனம் செலுத்தி வருகிறோம். நிரந்தர தீர்வை தேடி வருகிறோம். கடந்த 60 ஆண்டுகளில் நாங்கள் அஸ்திவாரத்தை கட்டி எழுப்பினோம். ஆனால் அந்த பெருமை மோடியால் எடுத்துக்கொள்ளப்பட்டது என்ற கார்கேயின் பேச்சுக்கு, 60 ஆண்டுகளில் நீங்கள் பள்ளங்களை மட்டுமே தோண்டியிருக்கிறீர்கள் என்கிறேன். காங்கிரஸார் பள்ளம் தோண்டும் போது சிறிய நாடுகள் கூட சீறாக முன்னேறின’ என்று கூறினார்.
பிரதமர் மோடி இவ்வாறு பேசும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். அப்போது பிரதமர், ’நீங்கள் சேற்றை வீசுகிறீர்களோ அவ்வளவு தாமரை மலரும்’ என்று கூறினார்.
இதையும் படிங்க: 'உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்க' - கல்லூரி வளாகத்தில் புதிய கட்டுப்பாடு!