டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த முழு பட்ஜெட் இதுவாகும்.
அடுத்தாண்டு பொதுத் தேர்தல் நடைபெறுவதால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். நடுத்தர மக்கள் எதிர்பார்த்தது போல மத்திய பட்ஜெட்டில் பல்வேறு கவர்ச்சிகர அறிவுப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
இறக்குமதி பொருட்களுக்கான சுங்க வரி அட்டவணையில் பல்வேறு மாற்றங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன் மூலம் நடுத்தர மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களில் விலை மாற்றம் ஏற்பட உள்ளது.
ஆடம்பர பொருட்களான தங்கம், வெள்ளி மறுறும் பிளாட்டினம் இறக்குமதிக்கான சுங்க வரியை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உயர்த்தி அறிவித்துள்ளதால் விரைவி ஆபரணத் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கிச்சன் சிம்னி இறக்குமதிக்கான சுங்க வரி 7 புள்ளி 5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கலப்பு ரப்பர் மீதான அடிப்படை இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன் மூலம் ரப்பரை மூலதனமாக கொண்டு உருவாக்கப்படும் டயர் உள்ளிட்ட பொருட்கள் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிகரெட் மீதான வரியை 16 சதவீதமாக உயர்த்தி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன் மூலம் சிகெரெட் விலை உயர வாய்ப்புள்ளது. எலக்ட்ரானிக் பொருட்கள் மீதான வரி விதிப்பு மாற்றத்தால் பல்வேறு மின் சாதன பொருட்கள் விலை உயர உள்ளன. உதாரணமாக ஸ்பீக்கர், இயர்போன் மற்றும் ஹெட்போன், குடை, கவரிங் நகைகள், சூரிய மின்கலங்கள், எக்ஸ்ரே இயந்திரங்கள், மின்னணு பொம்மைகளின் பாகங்கள், சைக்கிள்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Income Tax: ரூ.7 லட்சம் வரை இனி வரி செலுத்த தேவையில்லை!