கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் டயமண்ட் ஹார்பர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அப்பகுதி மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், "தனது கணவரும் அவரது தம்பியும் எனது மகளை தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துவருகின்றனர். இதனை நான் கண்டிக்கவே என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுக்கின்றனர். ஒருகட்டத்தில் என்னால் பொறுக்க முடியவில்லை.
இவர்களை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார். இந்த புகாரின் அடிப்படையில், இருவரும் இன்று (ஜூலை 19) கைது செய்யப்பட்டனர். முதல்கட்ட தகவலில், இவரும் பல ஆண்டுகளாக சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துவந்ததும், வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: தர்மபுரியில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோவில் கைது