கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா தொற்று கனிசமாக அதிகரித்துவருகிறது. இதுகுறித்து, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உயர் துறைச்சார்ந்த அலுவலர்களுடன் இன்று(டிச.29) ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்தக் கூட்டத்தில் பேசி மம்தா, "மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா, ஒமைக்ரான் தொற்று பாதிப்புகளை சுகாதாரத்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சர்வதேச விமான போக்குவரத்து கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தொற்று பாதிப்புகள் அதிகரிக்கும்பட்சத்தில் அலுவலகங்களில் 50 விழுக்காடு பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்குதல், பள்ளி மற்றும் கல்லூரிகளை மீண்டும் மூடுதல் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்கலாம்" எனத் தெரிவித்தார். மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று 752 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Petrol Price Drop: பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் குறைப்பு