WEEKLY HOROSCOPE: மேஷம்
இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் திட்டம் உண்மையானதாக இருக்கும், அதை உங்கள் பணியில் செயல்படுத்துவீர்கள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும், இதன் காரணமாக உங்கள் வருமானமும் அதிகரிக்கத் தொடங்கும். இந்த வாரம் தொழில் செய்பவர்களுக்கு மிகவும் நல்ல வாரமாகும்.
உங்கள் வியாபாரத்தில் சில திட்டங்களையும் சலுகைகளையும் முன் வைப்பீர்கள், இது உங்கள் தொழிலுக்கு நல்ல பயனளிக்கும், மேலும் உங்கள் வருமானம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இந்த வாரம் வேலை செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். குறைந்த முயற்சியுடன் வேலையை தொடங்கி வேகமாக செய்து முடிப்பீர்கள். குடும்ப சூழ்நிலை இனிமையாக இருக்கும்.
உங்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படலாம், நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு காயங்கள் ஏற்படலாம். திருமணமானவர்களின் வீட்டு வாழ்க்கை இந்த நேரத்தில் மிகவும் நன்றாக இருக்கும், மேலும் உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுடனும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனும் பயணம் மேற்கொள்வார். காதலிப்பவர்களுக்கு ஏற்ற வாரமிது. தொலைதூர பயணங்களை மேற்கொள்ளலாம், இந்த வாரம் பயணம் நிறைந்த வாரமாக இருக்கும்.
ரிஷபம்
இந்த வாரம் உங்களுக்கு மிகவும் செழிப்பான வாரமாக அமையும். வார தொடக்கத்தில் உங்களுக்கு கொஞ்சம் கவலைகள் இருக்கலாம், ஆனால் நாட்கள் செல்ல செல்ல எல்லாம் மாறிவிடும். வாரத்தின் நடுப்பகுதி நன்றாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். பணிபுரிவோர் அவர்களின் அறிவாற்றல் மூலமும் வேலை அனுபவம் மூலமும் நன்மை பெறுவார்கள்.
தொழில் புரிபவர்களுக்கு ஓரளவு நல்ல வாரமாக அமையும். பணிபுரியும் இடத்தில் அமைதியாகவும் கொஞ்சம் கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும். வருமானம் குறைவாகவும் செலவுகள் அதிகமாகவும் இருக்கும். உங்கள் உடல்நிலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். காதலிப்பவர்களுக்கு நல்ல நேரமிது. திருமணமானவர்களுக்கு இந்த வாரம் சவாலான வாரமாக இருக்கும். வார நடுப்பகுதி பயணத்திற்கு ஏற்றது.
மிதுனம்
இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாக அமையும். வார தொடக்கத்தில், அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். மேலும் பணிகளைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வார நடுப்பகுதியில், நீங்கள் ஆர்வத்துடனும், சுறுசுறுப்புடனும் உங்கள் வேலையை செய்து முடிப்பீர்கள். இந்த வாரத்தின் கடைசி நாட்களில் வருமானம் அதிகரிக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.
உங்கள் உறவு வலுப்படும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் நல்ல வாரமாக அமையும். நீங்கள் காதலிப்பவரை திருமணம் செய்துகொள்ள பெற்றொரிடம் சம்மதம் கேட்பீர்கள். பணிபுரிவோருக்கு நல்ல வாரமிது. உங்கள் வேலை சிறப்பாக இருக்கும். உங்கள் உடல்நிலையில் கவனம் வேண்டும். வார தொடக்கம் பயணத்திற்கு ஏற்றது. மாணவர்கள் படிப்பில் கவனமுடன் இருப்பார்கள், நன்றாக படிப்பார்கள்.
கடகம்
இந்த வருடத்தின் முதல் வாரம் உங்களுக்கு மிகுந்த பலனளிக்கும் வாரமாக அமையும். வாரத் தொடக்கத்தில் உங்களுக்கு பணியில் அதிக செலவு ஏற்படுவதால் மிகவும் கவனமாக பணிகளை செய்யவும் காலத்திற்கு ஏற்ற பணியை திறமையாக செய்வீர்கள். வாரத்தின் நடுப்பகுதி சிறப்பாக இருக்கும். ஆனால் வாரத்தின் கடைசி நாட்களில், நீங்கள் கவலையால் பாதிக்கப்படலாம்.
வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. பணம் அதிகரிக்கும். உங்கள் காதல் வாழ்க்கையில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். மற்றவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எனவே பேச்சு வார்தையின் மூலம் ஒரு தீர்வை காண முயற்சிக்கவும்.
மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி படிப்பது நல்லது. வாரத்தின் கடைசி இரண்டு நாட்கள் நன்றாக அமையும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.
சிம்மம்
இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாக அமையும். புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். உறவில் பேச்சுவார்தையும் புரிதலும் இருக்கும். காதல் வாழ்க்கையில் ஏற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் உங்கள் உறவில் காதல் அப்படியே இருக்கும்.
வேலை தேடுபவர்கள் தங்கள் கூர்மையான அறிவுத்திறனின் பலனைப் பெறலாம். உங்கள் பணி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த வாரம் வணிகம் மற்றும் வர்த்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களின் திட்டங்கள் பலனளிக்க வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். நீங்கள் நல்ல உணர்வை அனுபவிக்க முடியும்.
மாணவர்கள் படிப்பில் மகிழ்ச்சி அடைவீர்கள், பெரும்பாலான பாடங்களில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். வாரத்தின் கடைசி இரண்டு நாட்கள் பயணத்திற்கு ஏற்றவாறு அமையும்.
கன்னி
இந்த வருடத்தின் முதல் வாரம் உங்களுக்கு மிகுந்த பலனளிக்கும் வாரமாகும். உங்கள் வருமானம் கூடும். நீங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட வாய்ப்பு உள்ளது.நீங்கள் உங்கள் பணியை எளிதாக செய்ய முடியும். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவ வாய்ப்புள்ளது, குடும்பத்தில் ஒற்றுமையை உருவாக்கலாம்.
வேலை தேடுபவர்கள் தங்கள் பணியில் சிறிது ஏமாற்றம் அடையலாம். நீங்கள் ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் பணியை மாற்ற முயற்சி செய்யலாம். வணிக வர்த்தகம் இந்த வாரம் மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் வேலையில் நீங்கள் முன்னேற்றம் அடைய வாய்ப்பு உள்ளது. திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கை சாதாரணமாக இருக்கும்.
உங்கள் மனைவியிடம் பொய் கூறுவதை தவிர்க்க வேண்டும். காதல் வாழ்க்கை வாழ்பவர்கள் தங்கள் உறவை அதிகரிக்க தங்களால் இயன்றவரை முயற்சி செய்வார்கள். மாணவர்கள் படிப்பில் பலன் பெற வாய்ப்புள்ளது. அவரது கூர்மையான அறிவு அவருக்கு உதவலாம். வாரத்தின் கடைசி இரண்டு நாட்கள் பயண நோக்கத்திற்காக நன்றாக இருக்கும். உங்கள் ஆரோக்கியமும் நன்றாக அமையும்.
துலாம்
இந்த வாரம் உங்களுக்கு அமைதியாகவும் முக்கியமானதாகவும் இருக்கும். நீங்கள் நல்ல பலன்களைப் பெறலாம். மாணவர்கள் தங்கள் படிப்பில் மகிழ்ச்சியடைவார்கள், அவர்களின் கடின உழைப்பு நல்ல முடிவுகளைத் தரும். வாரத்தின் தொடக்கம் பயணத்திற்கு சிறந்ததாக உள்ளது.
திருமணமானவர்களின் இல்லற வாழ்வு ஏற்ற தாழ்வுகளைக் கடந்து செல்லும். குடும்பத்தில் சில பிரச்சனைகள் காரணமாக சிறு குழப்பங்கள் ஏற்படும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். நண்பர்களின் ஆதரவு கூடும். வேலை சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும்.
வேலை தேடுபவர்கள் தங்கள் முயற்சியில் வெற்றி பெறலாம். சக ஊழியர்களின் ஆதரவையும் பெற வாய்ப்பு உள்ளது. இந்த வாரம் வர்த்தகம் சிறப்பாக இருக்கும். பணம் சம்பாதிப்பதில் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
விருச்சிகம்
இந்த வாரம் உங்களுக்கு நன்றாக அமையும். வார தொடக்கத்தில் உங்களுக்கு அதிக வருமானம் வரும். உங்களுக்கு பணம் வர வாய்ப்புள்ளது. உங்கள் நிதி நிலைமை நன்றாக இருக்கும். நீங்கள் அந்த பணத்தை முழுமையாக முதலீடு செய்ய முயற்சி செய்யலாம். திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கை சாதாரணமாக இருக்கும்.
இந்த வாரம் உங்கள் காதலியுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் நல்ல பலன்களைப் பெறுவார்கள், அவர்களின் மரியாதை அதிகரிக்க கூடும். வர்த்தகம் இந்த வாரம் சிறப்பாக இருக்கும்.நல்ல செயல்திறன் காரணமாக உங்கள் வேலையை நீங்கள் முன்னெடுத்து செல்ல முடியும்.
மாணவர்களுக்கு இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். கடின உழைப்பு உங்களை முன்னிலைப்படுத்த வாய்ப்புள்ளது. முதல் நான்கு நாட்கள் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்.
தனுசு
இந்த வருடத்தின் முதல் வாரம் உங்களுக்கு மிகுந்த பலனளிக்கும் வாரமாகும். உங்கள் ஆளுமை மேம்படக்கூடும். மக்கள் உங்களை சுற்றி இருக்க விரும்புகிறார்கள். குடும்பத்தில் உறவுகளின் நிலை மோசமடையலாம். மனக்கசப்புகள் அதிகரிக்கலாம். எனவே கவனமாக இருங்கள். உங்கள் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது, உங்கள் வருமானம் சாதாரணமாக இருக்கலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். உங்கள் பணி வலுவடையும் வாய்ப்பு உள்ளது. முதலீடு செய்வது குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும். திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கை காதல் அடிப்படையில் முன்னேற வாய்ப்பு உள்ளது.
காதல் வாழ்க்கை வாழ்பவர்கள் சில ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். மாணவர்கள் வெளிநாடு சென்று படித்து வெற்றி பெறலாம். இந்த வாரம் பயணத்திற்கு ஏற்றவாறு உள்ளது.
மகரம்
இந்த வாரம் உங்களுக்கு சுமாரான பலனைத் தரும். வார தொடக்கத்தில் உங்கள் செலவுகள் மிகவும் அதிகமாக இருக்கும். இது உங்களை தொந்தரவு செய்யும். உங்களுக்குத் தேவையான பொருட்களைத் தவிர, தேவையற்ற பொருட்களையும் வாங்க வாய்ப்புள்ளது. உங்கள் வருமானம் நன்றாக இருக்கும்.
வேலை செய்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். வியாபாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும். உங்கள் வியாபாரத்தில் லாபம் கூடும். திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கை ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். காதலர்கள் இடையே மனக்கசப்பு ஏற்படலாம். மாணவர்கள் படிப்பில் கடின உழைப்பால் நல்ல பலன்களைப் பெறலாம். வாரத்தின் கடைசி இரண்டு நாட்கள் பயணத்திற்கு சாதகமாக இருக்கும்.
கும்பம்
இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். நிறைய பணம் பெறலாம், இது உங்கள் நிதி நிலைமையை வலுவாக வைத்திருக்க வாய்ப்புள்ளது. உங்களுக்கு சில செலவுகள் இருக்கலாம், ஆனால் அது உங்களுக்கு கவலை அளிக்கக் கூடிய விஷயமாக இருக்காது. இவை அனைத்தும் வேலை செய்பவர்களுக்கு மிகவும் நல்லது.
நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். எந்த பணியிலும் கவனமாக இருங்கள். இந்த வாரம் வணிகம் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் வருமானம் கூடும். நன்மைகளைப் பெறுவதன் மூலம், உங்கள் மன உறுதி அதிகமாகும்.
திருமணமானவர்களின் இல்லற வாழ்வில் மகிழ்ச்சி கூடும். நீங்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்வீர்கள். உங்கள் உறவை மகிழ்விக்க முடிந்த அனைத்தையும் செய்வீர்கள். காதல் உறவில் சில குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். சில நேரங்களில் நீங்கள் கோபமாக இருப்பீர்கள்.
மீனம்
இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். நீங்கள் உங்கள் வேலையில் முழு கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணிக்கு பாராட்டுகளைப் பெறுவார்கள். குடும்ப வாழ்க்கை சாதகமாக இருக்கலாம், நீங்கள் ஒரு சொத்தை விற்பதன் மூலமோ அல்லது வாடகைக்கு விடுவதன் மூலமோ நல்ல லாபம் பெற வாய்ப்புள்ளது.
தொழிலதிபர்கள் தங்கள் வியாபாரத்தில் பெரிதும் பயனடைவார்கள், உங்கள் திட்டங்கள் வெற்றியடைய வாய்ப்புள்ளது. உங்கள் உடல்நிலை பலவீனமாக இருப்பதால் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. திருமணமானவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
அவர்கள் வாழ்க்கைத் துணையின் மூலம் சில பெரிய நன்மைகளை பெறலாம். காதலர்கள் இனிமையாகப் பேசுவதன் மூலம் உறவில் மகிழ்ச்சி அடைவீர்.
இதையும் படிங்க: New Year 2022 Horoscope: இந்த வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ!