மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் கோசாபா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று திடீரென குண்டு வெடித்தது. உடனே சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்தனர்.
அங்கு விபத்தில் சிக்கிய ஆறு பேரை மீட்டெடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதில், இருவர் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
விபத்தில் சிக்கிய ஆறு பேரும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும், காவல் துறையினர் விபத்து குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.
இதனையும் படிங்க: குன்னூரில் அகற்றப்படாமல் இருக்கும் கட்சி போஸ்டர்கள்!