டெல்லி: நாட்டின் 75ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பிரதமர் கூறுகையில், இந்தியாவின் தொழில்நுட்பத்துறை வியக்கத்தக்கவகையில் வளர்ச்சி கண்டுவருகிறது. இப்போது செமிகண்டக்டர்கள், ஸ்மார்ட்போன் உற்பத்தியில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக செயல்பட்டுவருகிறது. அதேபோல நமது நாட்டில் 5G அலைக்கற்றைக்கான காத்திருப்பு முடிந்துவிட்டது.
இதன் பலன்கள் விரைவில் நாட்டின் ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைய உள்ளது. இந்த டிஜிட்டல் சகாப்தத்தில் அரசியல், பொருளாதாரம், சமூகம் உள்ளிட்டவையை மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நாட்டில் 5 சேவை தொடங்கும் என்று தெரிவித்தார். 5G அலைக்கற்றைக்கான ஏலம் இரண்டு வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
ஏழு நாட்களாக 40 சுற்றுகளில் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலம் ஒட்டுமொத்தமாக 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது. இதில் ஜியோ நிறுவனம் 24,740 MHz அலைக்கற்றைகளை ரூ. 88,078 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. பார்தி ஏர்டெல் 19,867.8 MHz அலைக்கற்றைகளை ரூ.43,084 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. மூன்றாவதாக வோடபோன் ஐடியா நிறுவனம் 6,228 MHz அலைக்கற்றைகளை ரூ.18,799 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. அதானி நிறுவனம் தனது நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக மட்டும் 400 MHz அலைக்கற்றையை ரூ.212 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
இதையும் படிங்க: 76 ஆவது சுதந்திர தினத்திற்கு டூடுள் வெளியிட்ட கூகுள்