ETV Bharat / bharat

பணி நிரந்தரம் செய்யக்கோரி வவுச்சர் ஊழியர்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் - புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரி: அண்ணா சிலை அருகே பொதுப்பணித் துறைச் சேர்ந்த வவுச்சர் ஊழியர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரி ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Voucher employees struggle to keep the job permanent!

author img

By

Published : Jan 12, 2021, 5:01 PM IST

புதுச்சேரி பொதுப்பணித் துறையில் 1311 தினக்கூலி ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர். இவர்களுக்கு கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனை வழங்கிட வலியுறுத்தி பொதுப்பணித் துறை ஊழியர்கள் சட்டப்பேரவை நோக்கி பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர்.

மேலும் இது குறித்து முதலமைச்சரிடம் மனு அளித்தும் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். அவர்களது போராட்டத்திற்கு அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று (ஜன.12) நூற்றுக்கும் மேற்பட்ட பொதுப்பணித் துறை வவுச்சர் ஊழியர்கள் அண்ணா சிலை அருகே திரண்டு ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்தினர். அப்போது சவ பாடையில் அமர்ந்து ஒப்பாரி வைத்தும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

வவுச்சர் ஊழியர்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்

பொதுப்பணித் துறை வவுச்சர் ஊழியர் சங்க தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட சங்க ஊழியர்கள் பங்கேற்று மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: திருமணமாகவிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.