பர்த்வான் : மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் அடுத்து பலிட்பூர் என்ற கிராமம் உள்ளது. கிராமத்திற்கு 2 கிலோ மீட்டர் முன்னர் வறண்ட கால்வாய், அடர்ந்த புல்வெளி, மற்றும் மூங்கில் காடு உள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மூங்கில் காட்டில் கடந்த 25 ஆண்டுகளாக மர வீடு கட்டி தன்னந்தனியாக முதியவர் ஒருவர் வாழ்ந்து வருகிறார்.
நேஷனல் ஜாக்கிரபிக்(National Geographic) சேனல் ஒளிபரப்பான தி லெஜண்ட் ஆப் மைக் டோஜ் சீரிசை போன்று தனக்கு தேவையானவற்றை தானே செய்து 25 ஆண்டுகளாக முதியவர் லோகு ராய் வாழ்ந்து வருகிறார்.
ஊரை விட்டு வெளியேறி ஏன் இத்தனை ஆண்டுகள் மர வீட்டில் லோகு ராய் வாழ வேண்டும் என்ற கேள்விக்கு அவரது சோகங்கள் பதிலளிக்கின்றன. பீகாரை சேர்ந்த லோகு ராய் தன் பெற்றோருடன் மேற்கு வங்கம் பர்த்வானில் குடிபெயர்ந்தார். சிறு வயதிலே திருமணம் செய்து கொண்ட லோகு ராஜ் மனைவி, மகன், இரு மகள்களுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
வசந்த கால நதியில் வெள்ளம் வந்தது போல், திடீர் தீ விபத்து சம்பவத்தில் தன் மனைவியை இழந்த லோகு ராஜ், அதிர்ச்சியில் மனநிலை பாதித்து நோய்வாய்பட்டார். அதன்பின் ஊரை விட்டு வெளியேறி மூங்கில் காட்டில் மர வீடு அமைத்து 25 ஆண்டுகளாக தன் வாழ்க்கையை கழித்து வருகிறார்.
பகல் நேரங்களில் செய்யும் வேலையின் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை தன் மகள்களுக்கு வழங்கி, அவர்களது வீட்டில் மதிய உணவு உண்டும், இரவில் விளக்கு வெளிச்சத்தில் மரவீட்டில் தங்கியும் லோகு ராய் வாழ்ந்து வருகிறார்.
வீடு தீப்பற்றியதில் முக்கிய ஆவணங்களும் எரிந்து போனதால் அரசிடம் இருந்து நிவாரணம் பெற்று வீடு கட்ட முடியவில்லை என லோகு ராஜின் மருமகன் வேதனை தெரிவிக்கிறார்.
இதையும் படிங்க : தேனியில் அடுத்தடுத்து பகீர்: மொட்டை மாடியில் காய்ந்த சிறுத்தையின் தோல்!