டெல்லியில் நடைபெற்ற ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்யா நாயுடு பங்கேற்றார்.
அதில் உரையாற்றிய நாயுடு, 'நாட்டின் வளர்ச்சிக்காக பொதுமக்களின் சிறப்பான பங்களிப்போடு மத்திய அரசு மேற்கொண்டுள்ள பெரியளவிலான முன்முயற்சிகளைக் கண்காணித்து வழிகாட்ட வேண்டும்.
பொது வாழ்வில் ஆளுநர்களின் பரந்த அனுபவத்தைப் பற்றிக் குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், கொள்கைகளை வடிவமைப்பதிலும் அவற்றைச் செயல்படுத்துவதிலும், சிறிய அளவில் உள்ள வளங்களை திறம்பட பயன்படுத்துவதை உறுதி செய்வதிலும், பொது வாழ்வில் நன்னடத்தை மற்றும் நெறிமுறைகளை உறுதி செய்வதிலும் அவர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.
ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் அரசமைப்பு அதிகாரியாக செயல்படுவதோடு, ஒரு மூத்த அரசியல் தலைவரின் தார்மீக உரிமையுடன் செயல்பட வேண்டும்.
மரம் வளர்ப்பு, நீர் பாதுகாப்பு, சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானம், கழிவு மேலாண்மை போன்ற பருவநிலைக்கு உகந்த நடவடிக்கைகளுக்கு மக்கள் இயக்கங்களை ஊக்குவிக்க வேண்டும்" என்று ஆளுநர்களை கேட்டுக்கொண்டார்.
100 கோடிக்கும் அதிகமான கோவிட் தடுப்பூசிகளை வழங்குவதில் இந்தியாவின் முயற்சிகளைப் பாராட்டிய குடியரசு துணைத் தலைவர், தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கான தயக்கத்தைக் தகர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு ஆளுநர்களை வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அனைவருக்கு முதல் டோஸ் தடுப்பூசியை உறுதி செய்யுங்கள் - அமைச்சர் மன்சுக் மாண்டவியா