ரியாசி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள திரிகூட மலை அருகே நேற்று மாலை (ஆக.20) மேகவெடிப்பு காரணமாக பெருமழை கொட்டியது. இந்த கனமழையால் அங்குள்ள மாதா வைஷ்ணோ தேவி கோயிலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோயில் வளாகத்திற்குள் காட்டாறு போல வெள்ளநீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வேண்டாம் என்றும், மலையில் உள்ள பக்தர்கள் கீழே இறங்கவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் வெள்ளநீர் வடிந்ததால், இன்று காலை முதல் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டது. அதன்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மாதா வைஷ்ணோ தேவி கோயிலுக்குச் சென்றனர். பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டாலும், மோசமான வானிலை காரணமாக ரோப் கார் மற்றும் ஹெலிகாப்டர் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மேலாண்மைக் குழுக்கள், மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:Live Video... மும்பையில் சரிந்து விழுந்த நான்கு மாடிக்கட்டடம்