வாஷிங்டன்: கடந்த ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளி யார் என்பதைக் கண்டறியும் விசாரணையில் கனடா அரசுடன் சேர்ந்து இந்தியாவும் பணிபுரியும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கனடா நாட்டின் குற்றச்சாட்டுகள் கவலை அளிப்பதாகத் தெரிவித்துள்ளன, கனடா-இந்தியா பிரச்சினை குறித்து எந்த நாடு கருத்து தெரிவிக்காத நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பிளிங்கன் முதல் முறையாக இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவிற்குத் தொடர்பு இருப்பதாகக் கனடா உளவுத்துறையிடம் இருப்பதாகக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். இந்த நிலையில் கனடா பிரதமர் குற்றச்சாட்டு இந்தியா மறுப்பு தெரிவித்து இருந்தது.
இது குறித்து அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறும் போது, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் ஆழ்ந்த கவலை அளிப்பதாகவும், இந்த சம்பவம் குறித்து கனடா-இந்தியா இணைந்து செயல்படுவது முக்கியமானது எனத் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து சகோதர நாடான கனடாவுடன் ஆலோசனை செய்து வருவதாகவும், ஆலோசனை மட்டும் அல்லாமல் இருநாடுகளை ஒருங்கிணைக்க விரும்புகிறோம் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீராங்கனைகளுக்கு விசா வழங்க சீனா மறுப்பு! கிரண் ரிஜிஜூ கண்டனம்!
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இந்தியா அரசு எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகின்றன. மேலும் இந்தியா ஆக்கப்பூர்வமான வேலைகள் செய்ய எங்களுடன் இணைவார்கள் என்று நம்புகிறோம் எனத் தெரிவித்திருந்தார்.
சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவிற்குத் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றாலும் தொலைத்தொடர்பு சம்பந்தமான சில தகவல்கள் உளவுத்துறைக்கு கிடைத்தன் அடிப்படையில் இந்தியா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளன என CBC செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியா மீதான குற்றச்சாட்டிற்குப் பின் உளவுத் தகவல்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றன. பைவ் ஐஸ் உளவுத்துறை தகவல்களைக் கனடாவிற்கு வழங்கி இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றன.
பைவ் ஐஸ் உளவுத்துறை ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய கூட்டணியாகும். இந்த 5 நாடுகள் தங்களுக்கு உள்ளேயே உளவுத் தகவல்களை பரிமாறிக்கொள்ளும். முக்கியமான உளவு விஷயங்களைப் பகிர்ந்து அதில் நடவடிக்கை எடுக்கும்.
பைவ் ஐஸ் உளவுத்துறை இந்தியாவின் நடவடிக்கை கண்காணித்து வருவதாகவும் மேலும் கனடாவிற்குத் தகவல்கள் இந்த உளவுத்துறை மூலம் கிடைக்கப் பெற்று இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இதனை வெளிப்படையாகக் கனடா பிரதமர் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியா - கனடா விவகாரம்; புதிய பிரதமர் கருத்துக்கணிப்பில் பின்தங்கிய ஜஸ்டின் ட்ரூடோ!