ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் ஷாகஞ்ச் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று(அக்.5) அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் தீப்பிடித்ததைக் கண்ட அப்பகுதி மக்கள், தீயை அணைக்க முயன்றனர்.
பின்னர் இதுகுறித்து தவகலறிந்து சம்பவ இடத்துக்குச்சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார், தீயை அணைத்தனர். பின்னர் மருத்துவமனையில் சிக்கியிருந்தவர்களையும் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதில், மருத்துவமனை இயக்குநர் ராஜன், அவரது மகன்கள் என மூன்று பேர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தனர். காயமடைந்த இருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:துர்கா பூஜை பந்தலில் தீ விபத்து - 2 குழந்தைகள் உள்பட மொத்தம் 5 பேர் பலி!