டெல்லி: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு வருகிற பிப்.10 தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னதாக, பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மத்திய தேர்தல் கமிட்டி (CEC) வியாழக்கிழமை (ஜன.13) டெல்லியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 2022 உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் அயோத்தியில் போட்டியிடுவார் என்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதற்கிடையில், துணை முதலமைச்சர்கள் கேசவ் பிரசாத் மவுரியா கௌசாம்பியின் சிராடு தொகுதியிலும், தினேஷ் சர்மா லக்னோவிலும் போட்டியிடுகின்றனர். எனினும், அதன் முறையான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
172 இடங்களுக்கான பெயர்களை பாஜக மத்திய தேர்தல் கமிட்டி ஆலோசித்து நிர்ணயம் செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில், முதல் வேட்பாளர் பட்டியலை கட்சி விரைவில் அறிவிக்க உள்ளது.
இதையும் படிங்க : உன்னாவ் வன்புணர்வு; பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாருக்கு காங்கிரஸ் சீட்