லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா நகரை சேர்ந்தவர் வழக்கறிஞர் துங்கநாத் சதுர்வேதி. இவர் 1999ஆம் ஆண்டு, டிசம்பர் 25ஆம் தேதி மதுராவில் இருந்து மொராதாபாத் செல்ல ரயிலில் இரண்டு டிக்கெட்களை எடுத்தார். அப்போது மதுரா-மொராதாபாத் இடையே ஒரு டிக்கெட் 35 ரூபாயாக விற்கப்பட்டுள்ளது.
ஆனால், டிக்கெட் கொடுத்த அலுவலர் 90 ரூபாய் வசூலித்துள்ளார். 20 ரூபாய் அதிகம் வசூலித்ததாகக் கூறி சதுர்வேதி, அந்த அலுவலரிடம் முறையிட்டார். ஆனால் அலுவலர் 20 ரூபாயை திருப்பித்தர மறுத்துள்ளார். இதனால் சதுர்வேதி ரயில்வே துறைக்கு எதிராக நுகர்வோர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் வட கிழக்கு ரயில்வேயின் கோரக்பூர் கோட்ட மேலாளர் மற்றும் அதிக விலை வசூலித்த அலுவலர் இருவரும் எதிர் தரப்பாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு கடந்த 21 ஆண்டுகளாக நுகர்வோர் ஆணையத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நுகர்வோர் ஆணையம் இன்று (ஆக. 13) அறிவித்தது.
அதில், ஒரு ஆண்டிற்கு 20 ரூபாய் என்ற கணக்கில், 12 விழுக்காடு வட்டியுடன் சேர்த்து சதுர்வேதிக்கு ரயில்வே துறை இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு இத்தனை ஆண்டுகள் அவர் செய்த செலவுகள், மனநல உளைச்சலுக்கு இழப்பீடாக 15 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அதோடு இந்த இழப்பீட்டை அடுத்த ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ஆண்டிற்கு வட்டி 15 விழுக்காடு வீதம் இழப்பீடை உயர்த்தி வழங்க நேரீடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சதுர்வேதி கூறுகையில், "நீதியை நிலை நாட்ட சிறுது காலம் எடுக்கும். சட்டத்திற்கு புறம்பான செயலுக்கு எதிரான இந்த தீர்ப்பால் நான் திருப்தியடைகிறேன். இத்தனை ஆண்டுகளில் பலமுறை எனது உறவினர்களும், நண்பர்களும் இப்பிரச்சனையை கைவிடும்படி கூறினர். ஆனால், நீதியை பெற்றாக வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்" என்றார்.
இதையும் படிங்க: பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்து நுபுர் சர்மாவை கொல்ல திட்டமிட்டவர் கைது