டெல்லி: 2023-24ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் மக்களவையில் இன்று(பிப்.1) தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் ஒரு ரூபாயில் வரவு, செலவு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
ஒரு ரூபாய் வரவு
நாட்டின் வருவாயில் ஒரு ரூபாயில் கடன்கள் மற்றும் கடன் சார்ந்த இதர வருவாய் மூலம் 34 காசுகளும், சரக்கு மற்றும் சேவை வரிகள் மூலம் 17 காசுகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி மூலம் 15 காசுகளும், பெருநிறுவனங்களுக்கான வரிகள் மூலம் 15 காசுகளும் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலால் வரி மூலம் 7 காசுகளும், வரியில்லா வருமானங்கள் மூலம் 6 காசுகளும் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சுங்க வரி மூலம் 4 காசுகளும், கடனில்லா முதலீட்டு வருவாய் மூலம் 2 காசுகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ரூபாயில் செலவு
ஒரு ரூபாயில் வட்டிகளுக்காக 20 காசுகளும், மாநிலங்களுக்கான வரி பகிர்விற்காக 18 காசுகளும் செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களுக்காக 17 காசுகளும், நிதி ஆணையம் மற்றும் பிற இதர பரிமாற்றங்களுக்காக 9 காசுகளும் செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நிதி உதவி மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு 9 காசுகளும், பாதுகாப்புத்துறைக்கு 8 காசுகளும் செலவிடப்படும் என்றும்- மானியங்களுக்காக 7 காசுகள் மற்றும் பென்சன் திட்டங்களுக்காக 4 காசுகளும் செலவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Union Budget 2023: மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கு சிறப்புத் திட்டம் அறிவிப்பு!