உத்தர பிரதேசம்: பரேலி மாவட்டத்தில், இந்து ஆண்களை காதலித்த முஸ்லீம் பெண்கள், இந்து மதத்திற்கு மாறி, அவர்களை திருமணம் செய்து கொண்டனர். தங்களது விருப்பப்படி இந்து மதத்திற்கு மாறி திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்த தம்பதி காவல்துறையிடம் பாதுகாப்பு கோரியுள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக காவல் துறை உறுதி அளித்துள்ளது.
மதீநாத்தில் அமைந்துள்ள முனி ஆசிரமத்தில், கடந்த ஆகஸ்ட் மாதம் சனாதன தர்மத்தின் முறைப்படி, இரண்டு முஸ்லிம் பெண்கள் இந்து ஆண்களை திருமணம் செய்துக் கொண்டனர். இதில் இராம் ஜைதி என்ற பெண் ஆதேஷ் குமார் என்ற இளைஞரை திருமணம் செய்து கொண்டு தனது பெயரை சுவாதி என மாற்றியுள்ளார். மேலும் ஷானாஸ் என்ற பெண் அஜய் என்ற இளைஞரை திருமணம் செய்துக் கொண்டு தனது பெயரை சுமன் தேவி என மாற்றிக்கொண்டார்.
இதுகுறித்து கூறிய ஷானாஸ் (எ) சுமன் தேவி, “எங்களது காதலுக்கு வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்து, என்னை கொலை செய்ய முயன்றனர். இதனால் நான் இந்து மதத்திற்கு மாறி அஜயை திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்றார்.
இதனைத்தொடர்ந்து இராம் ஜைதி, ‘நான் இந்து மதத்தை நம்புகிறேன். இதனால் நான் மதம் மாறி இந்து இளைஞர் திருமணம் செய்துக் கொண்டேன். இதற்கு எனது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆகையால் எங்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: மதம் மாறி காதல் திருமணம்: பாதுகாப்பு கேட்டு இளம்ஜோடி வீடியோ வெளியீடு!