ETV Bharat / bharat

ஜம்முவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - இந்திய ராணுவம் பயன்படுத்தும் துப்பாக்கி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லட்டப்பட்டனர்.

இந்திய ராணுவம்
இந்திய ராணுவம்
author img

By

Published : Jan 8, 2023, 11:08 AM IST

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு அருகே 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை கொல்லட்டப்பட்டனர். இந்த சம்பவம் நேற்றிரவு 7.45 மணியளவில் நடந்துள்ளது. பாலகோட் எல்லையில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தைக் கண்ட ராணுவ வீரர்கள் அந்த பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அதன்பின் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லட்டப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து 2 ஏகே ரக துப்பாக்கிகள், மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் (ஐஇடி), வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களது பின்னணி குறித்து விசாரணை நடந்துவருகிறது. ரஜோரியின் தாங்ரி கிராமத்தில் ஜனவரி 1ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 4 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் ஜனவரி 2ஆம் தேதி பாதிக்கப்பட்டவரின் வீட்டில் ஐஇடி வெடுகுண்டு வெடித்து சிதறியது.

அதில் 2 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர். இவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (ஜனவரி 8) நள்ளிரவில் ஒருவர் உயிரிழந்தார். அந்த வகையில் உயிரிழப்பு எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. இந்த கிராமத்தில் மேலும் பல ஐஇடி வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் மேப்ப நாய்களின் உதவியுடன் சோதனை பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இதையும் படிங்க: கபடிப் போட்டியை கண்டு ரசித்த ராகுல் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.