ETV Bharat / bharat

ஒற்றைக் காலில் 2 லட்சம் கி.மீ. சைக்கிள் பயணம்... மாற்றுத்திறனாளி டாக்டர் சாதனை... - 2 லட்சம் கிலோ மீட்டர் சைக்கிள் பயணம்

மனிதனின் முயற்சிக்கு முன்னால் வானமும் சிறு எல்லையே என்பது போல மகாராஷ்டிராவை சேர்ந்த புற்றுநோய் பாதித்த டாக்டர் ராஜூ, ஒரு காலால் 2 லட்சம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.

டாக்டர் ராஜூ
டாக்டர் ராஜூ
author img

By

Published : Nov 18, 2022, 10:24 AM IST

அமராவதி: மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்தவர் டாக்டர் ராஜூ துர்கானே. புற்றுநோய் பாதித்த இவருக்கு ஒரு கால், அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. கால் ஒன்றை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காத ராஜூ, ஒற்றைக் காலுடன் 2 லட்சம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் மிதித்து சாதனை படைத்துள்ளார். டெல்லி - மும்பை, மும்பை - பூனே, மும்பை - நாக்பூர் என ஒற்றைக் காலுடன் 2 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிள் ஓட்டியுள்ளார்.

2 லட்சம் கி.மீ. சைக்கிள் பயணம் செய்து சாதித்த டாகடர் ராஜூ

மற்றொரு காலிலும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அதற்காக ராஜூ சிகிச்சை பெற்று வருகிறார். புற்றுநோய் பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைந்து மீண்டும் தன் சைக்கிள் பயணத்தை தொடங்குவேன் என ராஜூ நம்பிக்கை தெரிவிக்கிறார்.

பல் மருத்துவரான ராஜூ, சினிமா மீதான அளவற்ற காதலால், சினிமாத் துறை சார்ந்த பட்டப்படிப்பை முடித்தார். மேலும், எழுத்துத் துறையில் உள்ள ஈடுபாட்டால் பெயிலியர் லவ் ஸ்டோரி, சைக்கிளிங் கிடா உள்ளிட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகளும் அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும் என்பதற்கு டாக்டர் ராஜூ சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார்...

இதையும் படிங்க: மேற்கு வங்கத்திற்கு புதிய ஆளுநர் நியமனம் !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.