பெங்களூரு: கர்நாடகா மாநிலம் தும்கூரு மாவட்டத்தில் 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பாவகடா தாலுகாவில் எங்கு பார்த்தாலும் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக பாவகடா தாலுக்காவில் வல்லூர் மற்றும் கடகனா ஏரி கிராமங்களுக்கு இடையே 2,000 மெகாவாட் மின் உற்பத்தி திறனுடன் 12,500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சோலார் பார்க்கிலும் மழை நீர் தேங்கியுள்ளது.
இந்த பகுதியில் முறையான வசதிகள், பாதுகாப்புகள் இல்லாததாலும், அதிகாரிகளின் அலட்சியத்தாலும் மழைநீர் தேங்கியுள்ள சோலார் பார்க் பகுதியில் இளைஞர்கள் ஆபத்தை உணராமல் நீச்சல் அடித்துவருகின்றனர். மின் உற்பத்தியின் போது மின்மாற்றிகளில் இருந்து வெளியாகும் மின்சாரம் தாக்க வாயப்புள்ளதாக பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: கேரளாவில் இருந்து எகிப்துக்கு சைக்கிளில் செல்லும் இளைஞன்