தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், சமூகத்தின் மீதான சிறந்த பங்களிப்புக்காக 'உலகின் 20 தலைசிறந்த பெண் 2021' (Top-20 Global Women of Excellence-2021 Award) விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும், மல்டி-எத்னிக் அட்வைசரி டாஸ்க் ஃபோர்ஸ் (Multi Ethnic Advisory Task Force) குழுவின் தலைவரான டேனி கே டேவிஸ் தேர்ந்தெடுத்துள்ளார்.
இவ்விருது வரும் மார்ச் 7ஆம் தேதி அமெரிக்காவின் இல்லினாய்ஸில் நடைபெறும் சர்வதேச பெண்கள் நாடாளுமன்றத்தின் 9ஆவது அமர்வில் வழங்கப்படவுள்ளது. இதனை, தமிழிசை காணொலி வாயிலாக பெற்றுக்கொள்வார் எனக் கூறப்படுகிறது.
தமிழிசைக்கு சமீபத்தில் தான், புதுச்சேரி மாநிலத்தின் கூடுதல் ஆளுநர் பதவி வழங்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக, மக்கள் பணியில் ஆளுநர் தமிழிசை ஈடுபட்டுவருகிறார்.
இந்த விருதுப் பட்டியலில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெயரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் 88 வயது 'மெட்ரோ மேன்'