ETV Bharat / bharat

’சிறு கூட்டங்கள், குறுகிய உரை’ - கரோனா பரவலால் மம்தா எடுத்த முடிவு!

author img

By

Published : Apr 19, 2021, 9:47 AM IST

Updated : Apr 19, 2021, 10:01 AM IST

மேற்கு வங்க மாநிலத்தில் இன்னும் மூன்று கட்டத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இனி சிறு கூட்டங்கள் நடத்தியும், வாக்குப்பதிவு நடைபெறும் மாவட்டங்களில் பேரணிகளில் சிறு உரைகள் ஆற்றியும் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மம்தா
மம்தா

மேற்கு வங்க மாநிலத்தின் 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு எட்டு கட்டங்களாக பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27ஆம் தேதியும், இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 1ஆம் தேதியும், மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதியும், நான்காம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 10ஆம் தேதியும், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 17ஆம் தேதியும் நடந்து முடிந்துள்ளது.

வரும் 22, 26, 29 ஆகிய தேதிகளில் மேலும் மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இனி சிறு கூட்டங்கள் மூலமாகவும், குறுகிய உரைகள் ஆற்றியும் பரப்புரை மேற்கொள்ள மம்தா பானர்ஜி முடிவெடுத்துள்ளார்.

பரப்புரை நேரத்தைக் குறைக்கும் மம்தா

இது குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் முன்னதாகப் பேசிய அவர், இனி வரும் பரப்புரைக் கூட்டங்களில் தனது தனது உரைகளை சுமார் 20 நிமிடங்களாக குறைக்கவோ அல்லது வழக்கமான நேரத்திலிருந்து 50 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை குறைக்கவோ முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தெரு மூலைகளில் பரப்புரை

பரப்புரை மேற்கொள்ள உள்ள நகரங்களில் தெரு மூலையில் உள்ளிட்ட இடங்களில் சிறு கூட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளதாகவும், தாங்கள் இனி எந்த பெரிய கூட்டத்தையும் நடத்த மாட்டோம் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். இதனால் மக்கள் ஒரே இடத்தில் நீண்ட நேரம் கூடுவது தவிர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இது குறித்து ட்வீட் செய்த திருணமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன், "மம்தா பானர்ஜி இனி கொல்கத்தாவில் பரப்புரை செய்ய மாட்டார். ஆனால், ஏப்ரல் 26ஆம் தேதி கொல்கத்தாவில் ஒரே ஒரு அடையாளக் கூட்டம் மட்டும் நடத்தப்படும். இனி அனைத்து மாவட்டங்களிலும் அவரது அனைத்து தேர்தல் பேரணிகளுக்கும் நேரம் குறைக்கப்படுகிறது. 30 நிமிடங்களுக்குள் இனி அனைத்தும் நடைபெறும்" எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மம்தாவும் இதனை தற்போது உறுதி செய்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் அதிகரிக்கும் கரோனா பரவல்

மேற்கு வங்க மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆறு லட்சத்து 59 ஆயிரத்து 927ஆக உயர்ந்துள்ளது. நேற்று (ஏப்.18) மட்டும் அங்கு எட்டாயிரத்து 419 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தில் நேற்று இருபத்தி எட்டு பேர் உயிரிழந்த நிலையில், மாநிலத்தின் இறப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 568 ஆக உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில் மட்டும் இரண்டாயிரத்து 197 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நார்த் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 1,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: அசாம் முன்னாள் முதல்வர் பூமிதர் பர்மன் காலமானார்

Last Updated : Apr 19, 2021, 10:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.