ETV Bharat / bharat

"WeStandwithleo" : Xல் டிரெண்டான #DMKFearsThalapathyVIJAY ஹேஷ்டேக்!

Leo Audio Launch: இன்று காலை முதலே எக்ஸ் பக்கத்தில் விஜயின் ரசிகர்கள் #DMKFearsThalapathyVIJAY என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Leo
Leo
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 11:42 AM IST

சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஜய். பல்வேறு திறமைகளை கொண்டு இருக்கும் நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். இவரது படங்கள் வெளியாகும் நாட்களில் ரசிகர்கள் திரையரங்குகளை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.

Leo
Leo

தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக திகழும் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் தயாரித்துள்ளனர். மாஸ்டர் படத்துக்குப் பின் விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத் கூட்டணி 2வது முறையாக ஒன்று சேர்ந்துள்ளது. இந்த படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்களில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் முன்னரே அறிவிக்கப்பட்டது.

இதனால் ரசிகர்கள் லியோ இசை வெளியிட்டு விழாவிற்காகவும், நடிகர் விஜய்யின் குட்டிக் கதைக்காவும் மிகுந்த எதிர்ப்பார்புடன் காத்திருந்ததனர். முன்னர் லியோ படம் இசை வெளியிட்டு விழா செப்டம்பர் இறுதியில் இருக்கலாம் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார்.

இரட்டிப்பு சந்தோஷத்துடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இடியாய் இறங்கிய செய்தி, லியோ படத்திற்கு இசைய வெளியீட்டு விழா கிடையாது என்பது தான். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வெளியிட்டு உள்ள ‘X' வலைதளப் பதிவில், "பாஸ் (நுழைவு சீட்டு) வேண்டும் என்று அதிகமான பேர் கோரிக்கை வைப்பதாலும் மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டும், லியோ இசை வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்து உள்ளோம்.

ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அடிக்கடி அப்டேட்கள் உடன் உங்களோடு தொடர்பில் இருப்போம். மேலும், பலர் நினைப்பதுபோல், இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல" என தெரிவிக்கப்பட்டது. அதேநேரம் இது தொடர்பாக பல்வேறு யூகங்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.

இந்த நிலையில் விஜயின் ரசிகர்கள் லியோ படம் இசை வெளியிட்டு விழா ரத்து செய்ததற்கான காரணம் திமுக அரசு தான் என்று கூறி 'X' வலைதளப் பக்கத்தில் #DMKFearsThalapathyVIJAY என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. #LeoAudioLaunch #westandWithLeo உள்ளிட்ட ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:தாதா சாஹேப் பால்கே விருது பெறும் நடிகை வஹிதா ரஹ்மான்.. செங்கல்பட்டு டூ பாலிவுட் வரை கடந்து வந்த பாதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.