மேஷம்: குழந்தைகள் உங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அவர்களின் எதிர்காலத்தை நினைத்து, நீங்கள் இத்தனை நாள் உழைத்து வந்தீர்கள். நெடு நாட்களாக முடிக்காமல் இருந்த பணிகளை நிறைவு செய்வீர்கள். மருத்துவத் துறை மற்றும் பொதுத் துறையில் இருப்பவர்களுக்கு சிறந்த நாளாக அமையும்.
ரிஷபம்: ஒரு ஆக்கபூர்வமான போட்டி நிறைந்த நாளாக இருக்கும். செயல் திறன் மூலமாக உங்களுடன் பணிபுரிபவர்களையும், மேலதிகாரிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். அவர்கள் உதவி செய்ய ஆர்வமாக இருப்பார்கள். நீங்கள் மேற்கொள்ள உள்ள பணியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
மிதுனம்: சில குறிப்பிட்ட நபர்களுடனான உறவு உணர்வு பூர்வமானதாக இருக்கும். இதனால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். நாளின் பிற்பகுதியில் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களை எதிர்நோக்க நேரிடும். எனினும், பதற்றம் அடையாமல் நிதானமாக கையாண்டால் அதில் இருந்து தப்பிக்கலாம்.
கடகம்: பணியை பொறுத்தவரை மிகவும் சாதகமாக இருக்காது. வேலையில் மனம் இல்லாமல் குழப்பமான மனநிலை இருக்கும். குழந்தைகள் பிரிவால் தனிமையாக உணர்வீர்கள்.
சிம்மம்: அனைத்து முடிவுகளையும் நன்றாக சிந்தித்து விரைவாக மேற்கொள்வீர்கள். உற்சாகமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள். வழக்கமான பணி தான் என்றாலும், கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்றுவது நல்லது. சிலருடன் விவாதத்தில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது. கவனத்துடன் செயல்படவும்.
கன்னி: குடும்பம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். பேச்சு திறன் மற்றும் அறிவாற்றல் காரணமாக சச்சரவுகளைத் தீர்த்து விடுவீர்கள். பொறுமையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அனைத்தையும் அமைதியாக அணுகுவீர்கள்.
துலாம்: குடும்பத்துடன் நேரம் செலவிடுவீர்கள். அவர்களுடன் சிறிய பயணம் சுற்றுலா செல்லும் வாய்ப்பு உண்டு. குதூகலமான நாளாக இருக்கும். மன அமைதிக்காக கோயில்களுக்கும், ஆன்மீக இடங்களுக்கும் செல்லும் வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம்: மனதில் வெளிக்காட்டாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த உணர்வுகள் வெளிவரக்கூடும். இதனால் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படலாம். மன அழுத்தத்தை போக்க, மனதிற்கு பிடித்தவர்கள் உடன் செலவிடவும்.
தனுசு: குறிக்கோளை நோக்கிய பயணம் வெற்றி பெறும். உறுதியான மனப்பான்மை வழிகாட்டியாக இருக்கும். எனினும் பாதையில் சவால்களை எதிர்கொள்ளும் வாய்ப்புண்டு.
மகரம்: உடல் நலத்தின் மீது கவனம் செலுத்தி வந்ததால், அது உதவியாக இருக்கும். நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதில், கால தாமதம் ஏற்படலாம். ஆனால் அனைத்தையும் நிறைவு செய்து விடுவீர்கள். காலதாமதம் காரணமாக, மேலதிகாரி மீது வருத்தம் கொள்ளலாம். நிதி நிலைமை நன்றாகவே இருக்கும்.
கும்பம்: குடும்பத்தினருடன் விருந்துக்கு செல்வீர்கள் அல்லது கோயிலுக்கு செல்வீர்கள். மொத்தத்தில் ஒன்றாக நேரத்தை கழிப்பீர்கள். அந்த தருணங்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். பகிர்ந்து கொள்ளும் அன்பு, பல மடங்காக திரும்பி வந்தடையும். குடும்ப உறுப்பினர்கள் பாராட்டுவார்கள்.
மீனம்: சில மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்யவும். ஒரே நாளில் அனைத்தையும் முடித்துக் கொள்ள முடியாது என்றாலும், நேரத்தை எடுத்துக் கொண்டு பணியாற்றவும். பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம், பணியில் சிறந்து விளங்க முடியும்.
இதையும் படிங்க: Weekly horoscope: இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு சாதகமாக உள்ள ராசிகள் எது தெரியுமா?