ETV Bharat / bharat

பட்டாசுகளுக்கு  தடை: சிவகாசியில் 1.5 லட்சம் பேர் வேலையின்றி தவிப்பு

author img

By

Published : Oct 21, 2022, 8:23 AM IST

Updated : Oct 21, 2022, 2:40 PM IST

பல்வேறு மாநிலங்களில் பட்டாசுகளுக்கு தடை மற்றும் குறிப்பிட்ட ரசாயன பயன்பாடு கூடாது என்ற பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால் சிவகாசியில் 1.5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளால் சிவகாசியில் 1.5 பேர் வேலையின்றி தவிப்பு

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு தயாரிப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக பிரிண்டிங் பிரஸ்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது 1,000க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் சிவகாசியில் இயங்கி வருகின்றன. இதில் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர்.

இங்குள்ள 6.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் முக்கிய தொழிலாக பட்டாசு தயாரிப்பு இருந்து வருகிறது. இதனிடையே கடந்த 2 வருடங்களாக கரோனா கட்டுப்பாடுகளால் முடங்கி இருந்த பட்டாசு தயாரிப்பு, தற்போது வேகமெடுத்து நல்ல பலனை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது.

ஆனால், பல்வேறு மாநிலங்களில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க தடை, பட்டாசு தயாரிப்பில் பேரியம் உபயோகிக்கக் கூடாது மற்றும் பசுமை பட்டாசுகள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்ற பல்வேறு கட்டுப்பாடுகளினால், 1.5 லட்சம் பேர் வேலை பறிபோயுள்ளது.

இதுகுறித்து பட்டாசு தொழிளாலர்கள் தரப்பில், “கணிசமான பொருளாக இருந்தபோதிலும் பூ பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டாசுகள் முழுவதுமாக கையால் செய்யப்படுபவை என்பதால், அவற்றை உற்பத்தி செய்ய முடியாமல் தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர். இந்த வேலையை சுமார் 40% பேர் செய்து வந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு தொழிலாளி நாகேந்திரன் கூறுகையில், "கடந்த 20 ஆண்டுகளாக பட்டாசு ஆலையில் பணியாற்றி வருகிறேன். சிவகாசி பகுதியில் பட்டாசு தொழில் மட்டுமே உள்ளது. 5 லட்சம் பேருக்கு பட்டாசு தொழில் மட்டுமே வருமானம். இங்குள்ள சூழ்நிலையில் விவசாயம் செய்ய முடியாது. பட்டாசு வியாபாரம் மட்டுமே செய்ய முடியும்.

சில ரசாயனங்கள் பயன்படுத்த தடை, வெடி பொருட்கள் தயாரிக்க தடை என பல ஆண்டுகளாக பட்டாசு தொழில் பாதிக்கப்பட்டு வருகிறது. மழை காரணமாக பட்டாசு தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல மாநிலங்கள் தீபாவளியை ஒட்டி பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும், வெடிப்பதற்கும் தடை விதித்துள்ளன.

இதனால் எங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தி, பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என பட்டாசு தொழிலாளர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்,'' என கூறினார்.

தொடர்ந்து பட்டாசு தொழிலாளி நாகம் கூறுகையில், "இனி பட்டாசு உற்பத்தியோ, விற்பனையோ இல்லை. பட்டாசு தவிர வேறு தொழில்கள் எதுவும் எங்களுக்குத் தெரியாது. அரசின் சில சட்டங்களால் எங்கள் வேலை பறிபோகிறது. இதனை அரசு பரிசீலிக்க வேண்டும். எங்கள் நலன் சார்ந்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தீபாவளி: சென்னையில் புதிய தொழில்நுட்பங்களுடன் 18,000 போலீசார் தீவிர கண்காணிப்பு

Last Updated : Oct 21, 2022, 2:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.