சிக்கமங்களூரு: கர்நாடக மாநிலம், சிக்கமங்களூரு அருகே உள்ள ஹோசஹள்ளி என்ற கிராமத்தில் நேற்றிரவு(செப்.6) விநாயர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்காக எடுத்துச்சென்றனர்.
அலங்கரிக்கப்பட்ட வண்டியில் சிலைகளை வைத்து எடுத்துச்சென்றனர். சிலைகளை கரைத்துவிட்டு திரும்பும்போது, வண்டியில் பொதுமக்கள் சிலர் அமர்ந்து வந்துள்ளனர். அப்போது, வண்டியின் உச்சியில் மின்சாரக் கம்பி பட்டதில், அதில் அமர்ந்திருந்த அனைவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
பாதிக்கப்பட்ட அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் மூன்று பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவர், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்த மற்றொரு பெண்மணி உயிர் பிழைத்தார்.
மின்கம்பி கீழே தொங்கிக் கொண்டிருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இதற்கு மாநில மின்வாரியம்தான் பொறுப்பு என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இதையும் படிங்க: மாரடைப்பு ஏற்பட்டு 8 வயது சிறுவன் உயிரிழப்பு... மயக்க மருந்து காரணமா?