ETV Bharat / bharat

சாமிக்கு பிடிக்கும் குடை துர்கா ஸ்டாலினுக்கு பிடிக்கப்பட்டதா? - சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ - Stalin Wife Durga stalin

தியாகராஜ சுவாமிகள் திருக்கோயிலில் சாமிக்கு பிடிக்கும் குடை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி, துர்கா ஸ்டாலினுக்குப் பிடிக்கப்பட்டதாக வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

துர்கா ஸ்டாலின்
துர்கா ஸ்டாலின்
author img

By

Published : Dec 12, 2022, 6:40 PM IST

Updated : Dec 12, 2022, 7:49 PM IST

சாமிக்கு பிடிக்கும் குடை துர்கா ஸ்டாலினுக்கு பிடிக்கப்பட்டதா? - சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ

சென்னை: திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் சாமிக்கு பிடிக்கப்படும் குடை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு பிடிக்கப்பட்டது தொடர்பாக வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

தீவிர ஆன்மிகவாதியான துர்கா ஸ்டாலின், குடும்ப உறுப்பினர்களின் நலன் வேண்டி, அடிக்கடி கோயில்களுக்குச் செல்வது, பால் குடம் எடுப்பது உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செய்து வருகிறார்.

இந்நிலையில், சென்னை திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமிகள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய துர்கா ஸ்டாலின் சென்றுள்ளார்.

துர்கா ஸ்டாலினுக்கு பூரண கும்பம் வரவேற்பு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திடீரென மழை பெய்த நிலையில், கோவிலினுள் சென்ற துர்கா ஸ்டாலினுக்கு, சுவாமிக்கு பிடிக்கும் குடை பிடிக்கப்பட்டதாகவும், அதையடுத்து அவரது பணியாளர்கள் விரைந்து வந்து வேறு குடை பிடித்து அழைத்துச் சென்றதாகவும் வீடியோ வெளியாகி உள்ளது.

சாமிக்கு பிடிக்கும் குடை, துர்கா ஸ்டாலினுக்கு பிடிக்கப்பட்டதாக வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. வீடியோ குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: உதயநிதி அமைச்சராவதற்குத் தகுதியானவரா? - டி.கே.எஸ் இளங்கோவன் சிறப்பு நேர்காணல்

Last Updated : Dec 12, 2022, 7:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.