ETV Bharat / bharat

வறுமை: மனைவி, மகளை ஏர் கலப்பையில் பூட்டி நிலத்தை உழுத விவசாயி

தெலங்கானாவில் விவசாயி ஒருவர் காளை மாடுகளை வாங்க வசதியில்லாததால், மனைவி மற்றும் மகளை ஏர் கலப்பையில் பூட்டி நிலத்தில் களை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

farmer
farmer
author img

By

Published : Jul 30, 2022, 10:27 PM IST

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் நாராயணபேட் மாவட்டத்தில் உள்ள சிந்தகுண்டா கிராமத்தைச் சேர்ந்த லக்‌ஷ்மணா என்ற விவசாயி, நிலத்தில் உழுவதற்கு காளைகள் வாங்க முடியாததால், தனது மனைவி மற்றும் மகளை ஏர் கலப்பையில் பூட்டி உழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதுகுறித்து விவசாயி லக்‌ஷ்மணா கூறுகையில், "குத்தகைக்கு எடுத்த ஒரு ஏக்கர் நிலத்தில் வெண்டைக்காய் பயிரிட்டுள்ளேன். அண்மைக்காலமாக பெய்த பருவமழையால் களைகள் அதிகம் வளர்ந்துவிட்டன. களைகளை அகற்ற கூலித் தொழிலாளர்களை வைக்க முயற்சித்தேன். ஆனால், அதற்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை செலவாகும். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. எனக்கு சொந்தமாக மாடுகளும் இல்லை. அதனால், எனது மனைவி மற்றும் மகளின் உதவியுடன் களைகளை அகற்றினேன்" என்று கூறினார்.

இதையும் படிங்க:விறகு சேகரிக்கச் சென்ற ஏழைப் பெண்மணிக்கு அடித்த யோகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.