கனடாவைச் சேர்ந்த லக்பீர் சிங் லாண்டா என்ற பயங்கரவாதி, வரும் தீபாவளியை ஒட்டி பஞ்சாபில் மிகப்பெரிய அசம்பாவிதத்தை ஏற்படுத்த உள்ளதாக டெல்லி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் டெல்லி காவல்துறையினர், பஞ்சாப்பின் அமர்தசரஸிற்கு சென்று அதிரடி சோதனை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அமிர்தசரஸின் டிசிபி முக்விந்தர் சிங் தலைமையில் டெல்லி காவல்துறையினர் மற்றும் குண்டர் தடுப்பு குழுவினர், சந்தேகத்திற்கிடமான ஜீ மண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் சோதனை செய்தனர். அப்போது கனடா பயங்கரவாதி லக்பீர் லாண்டாவுடன் தொடர்புடைய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்போது அவர்களிடம் இருந்து 3 கைத்துப்பாக்கிகள் மற்றும் ஏகே 47 ரக துப்பாக்கிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அதேநேரம் இதுதொடர்பாக மேலும் சிலரை கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும், தற்போது பிடிபட்ட நபர்களின் பெயர்களை அறிவிக்க முடியாது எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச்சேர்ந்த ஒரு இளைஞர் கைது - என்ஐஏ அதிரடி