ETV Bharat / bharat

“தெலங்கானாவில் 9 ஆண்டுகளில் எந்த வளர்ச்சியும் இல்லை” - காங்கிரஸ் வேட்பாளர் முகமது அசாருதீன் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டி! - Telangana Polls

Azharuddin ETV Bharat Exclusive Interview: கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய முகமது அசாருதீன் காங்கிரஸ் சார்பாக ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் பிஆர்எஸ் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

telangana-polls-exclusive-azharuddin-eyes-victory-in-jubilee-hills-promises-development-for-commoners-in-constituency-of-billionaires
கோடீஸ்வரர்கள் தொகுதியான ஜூப்ளி ஹில்ஸில் வெற்றி பெற்றால் சாமானியர்களின் வளர்ச்சி உறுதி - முகமது அசாருதீன்!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2023, 6:54 AM IST

ஹைதராபாத்: தெலங்கானாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் சார்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன், ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தனது சொந்த ஊர் என்பதால், கண்டிப்பாக வெற்றி பெறுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இந்த நிலையில், ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் ஈடிவி பாரத் உடனான பிரத்யேக பேட்டியில், "ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியின் நிலை மிகவும் மேசமாக இருக்கிறது. இந்த தொகுதியின் பெயர் தான் ஜூப்ளி ஹில்ஸ் என உள்ளது.

மேலும் இந்த தொகுதி கோடீஸ்வரர்கள் அதிகம் வாழ்கின்றனர் என அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் இந்த தொகுதியின் நிலையில், தற்போது வரை எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது. இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், கண்டிப்பாக ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வேன்” எனத் தெரிவித்தார்.

மேலும், “நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். தேர்தல் போட்டி புதியது இல்லை. இது எனது சொந்த ஊர் என்பதால், கண்டிப்பாக வெற்றி பெறுவேன். ஜூப்ளி ஹில்ஸ் மக்களிடம் எனக்குக் கிடைத்த வரவேற்பு சிறப்பானது. இங்கு உள்ள மக்கள் மிகவும் நல்லவர்கள். அவர்களுக்காக நான் பணி செய்ய வேண்டும் என விரும்புகிறேன்" எனக் கூறினார்.

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருமான என்ற கேள்விக்கு, “9 ஆண்டுகளாக பிஆர்எஸ் கட்சியினரால் தெலங்கானாவில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை. தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், பங்காரு தெலங்கானா (தங்க தெலங்கானா) எனக் கூறுகிறார். ஆனால் உண்மையில் 9 ஆண்டுகள் ஆட்சியிலிருந்து எந்த வளர்ச்சி பணிகளையும் முன் எடுக்காமல் உள்ளார். இதனால் இந்த முறை கண்டிப்பாக தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்” எனத் தெரிவித்தார்.

மேலும், “குறிப்பாக ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் எந்த வளர்ச்சியும் இல்லை. என்னைப் பொறுத்தவரை வளர்ச்சி என்பது, ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, பெரிய கட்டடங்கள் கட்டி பெரிய நபர்களை கொண்டு வருவது வளர்ச்சி இல்லை. இங்கு வேலை வாய்ப்புகள் இல்லை. மக்களின் வாழ்வு மேம்படவில்லை” எனத் தெரிவித்தார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் குறித்த கேள்விக்கு, “இந்திய அணியினர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பேட்டிங், பீல்டிங் மற்றும் பந்துவீச்சு நன்றாக உள்ளது” எனக் கூறினார்.

தெலங்கானா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 30ஆம் தேதி 119 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் 117 தொகுதிகளிலும், சிபிஐ 2 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆக்ராவில் ஹோட்டல் பணிப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 4 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.