ETV Bharat / bharat

மத்திய அரசு நடத்தும் கல்வி அமைச்சர்கள் மாநாட்டை புறக்கணித்த தமிழ்நாடு!

குஜராத்தில் நடைபெற்று வரும் 2 நாள்கள் கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழ்நாடு புறக்கணித்துள்ளது.

மத்திய அரசு நடத்தும் கல்வி அமைச்சர்கள் மாநாட்டை புறக்கணித்த தமிழ்நாடு

author img

By

Published : Jun 1, 2022, 6:51 PM IST

இந்தியா முழுவதும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் பள்ளிக்கல்வி, உயர் கல்வி அளவில் பாடத்திட்டங்களை மாற்றவும் குழு அமைக்கப்பட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது மற்றும் பாடத்திட்டம் மாற்றி அமைப்பது குறித்து இன்றும், நாளையும் குஜராத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் உள்ள கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.

இதில் நாடு முழுவதும் கல்வி அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதில் தமிழ்நாட்டின் சார்பில் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. அதேபோன்று உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த அலுவலர்களும் மாநாட்டில் பங்கேற்கவில்லை.

தேசிய அளவில் பாடத்திட்ட மாற்றம் தொடர்பாக நடைபெறும் பணிகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு பங்கேற்கவில்லை. ஏற்கெனவே தமிழ்நாடு ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக முரண்பாடு நிலவி வருகிறது.

திறந்த நிலைப்பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், புதிய கல்விக்கொள்கையைப் படிக்காமல் சிலர் எதிர்ப்பதாகவும் தமிழ்நாடு ஆளுநர் விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, புதிய கல்விக் கொள்கையை நன்கு படித்து தெரிந்த பிறகே அதனை எதிர்ப்பதாக கருத்துத் தெரிவித்தார்.

national education minister conferance
மத்திய அரசு நடத்தும் கல்வி அமைச்சர்கள் மாநாட்டை புறக்கணித்த தமிழ்நாடு

இத்தகைய சூழ்நிலையில் குஜராத்தில் நடைபெறும் கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழ்நாடு புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வட மாநில மாணவர்களால் கல்வி நிறுவனங்களில் கரோனா அதிகரிப்பு- மா. சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.