ETV Bharat / bharat

'ஒரு முறை கூட நேரில் பார்த்ததில்லை' - புனித் நினைவிடத்தில் விஜய்சேதுபதி அஞ்சலி - மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார்

நடிகர் புனித் ராஜ்குமாரோடு போனில் பேசியுள்ளதாகவும், ஆனால் நேரில் பார்க்கவில்லை என்ற வருத்தம் உள்ளதாகவும் நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்சேதுபதி பேட்டி
நடிகர் விஜய்சேதுபதி பேட்டி
author img

By

Published : Nov 4, 2021, 2:21 PM IST

கன்னடத் திரையுலகின் பவர் ஸ்டாராக வலம் வந்த புனித் ராஜ்குமார், கடந்த அக்.29 ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். புனித் ராஜ்குமார், சிறந்த நடிகராக திகழ்ந்தது மட்டுமின்றி, பல்வேறு சமூக நலப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், பெங்களூரு சென்றிருந்த நடிகர் விஜய்சேதுபதி புனித்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். புனித்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கன்னட மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.

புனித் தங்கமான மனிதர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," மும்பையில் படப்பிடிப்பில் இருந்ததால் வர முடியவில்லை. முன்னதாக அவருடைய படங்கள் பற்றி மட்டும் தான் தெரியும். சமூக வலைதளங்களில் அவருடைய வீடியோக்களைப் பார்த்து தான் அவரைப் பற்றி தெரிந்தது. தங்கமான மனிதர். மீண்டு வருவார் என நம்பிக்கையோடு இருந்தேன். அவர் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு முறை போனில் பேசி இருக்கிறேன். நேரில் பார்க்கவில்லை என்ற வருத்தம் இருக்கிறது" என்றார்.

நடிகர் விஜய்சேதுபதி பேட்டி

புனித் ராஜ்குமார் உதவியில் படித்துவரும் 1800 மாணவர்களின் கல்விச் செலவை நடிகர் விஷால் ஏற்றுக்கொள்ளவதாக அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர் கேட்டபோது, " நல்ல விஷயம். புனித் பெயரில் செய்வது மகிழ்ச்சி" என்று கூறினார்.

இதையும் படிங்க: விஜய் சேதுபதி தாக்கப்பட்ட விவகாரம் - உண்மை தகவல் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.