ETV Bharat / bharat

குஜராத் கலவரம்: டீஸ்டா செடல்வாட் உடனடியாக சரணடைய தடை... இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட்டை உடனடியாக சரண்டையுமாறு கூறிய குஜராத் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வழக்கில் அவருக்கு ஒரு வார கால இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

Teesta Setalvad
Teesta Setalvad
author img

By

Published : Jul 1, 2023, 10:55 PM IST

டெல்லி : குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட்டை உடனடியாக சரணடையுமாறு கூறிய குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வழக்கில் அவருக்கு ஒரு வார கால இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

கடந்த 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக அப்போதைய குஜராத் முதலமைச்சர் மற்றும் தற்போதைய பிரதமருமான மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் என அந்த தீர்ப்பில் கூறப்பட்டது.

இதனிடையே, போலி ஆதாரம் வைத்து வழக்கு தொடுத்ததாக குஜராத் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட்டை அகமதாபாத் போலீசார் குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவர வழக்குகளில் அப்பாவி மக்களை கைது செய்ய போலியான ஆவணங்களை தயாரித்ததாக கூறி முன்னாள் டி.ஜி.பி ஆர்.பி. ஸ்ரீகுமார், சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சிறையில் இருந்த டீஸ்டா செடல்வாட், தனக்கு ஜாமீன் வழங்கும்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து டீஸ்டா செடல்வாட் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

பின்னர், அவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் அவரது ஜாமீனை நீடித்து குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், டீஸ்டா செடல்வாட்டின் ஜாமீன் நீட்டிப்பு மனு குஜராத் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டீஸ்டா செடல்வாட்டின் ஜாமீனை நீட்டிக்க மறுத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், டீஸ்டா செடல்வாட் உடனடியாக சரணடைய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். உடனடியாக சரணடைய வேண்டும் என்ற குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டீஸ்டா செடல்வாட் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கும்படி டீஸ்டா தாக்கல் செய்த இந்த மனுவை அவசர வழக்காக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உடனடியாக விசாரித்தனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார், ஏஎஸ் ஒஹா தலைமையிலான அமர்வு முன் மனு விசாரணைக்கு வந்த நிலையில் டீஸ்டா செடல்வாட் உடனடியாக சரணடைய வேண்டும் என்ற குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

மேலும், டீஸ்டா செடல்வாட்வுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மேலும், இந்த வழக்கை கூடுதல் அமர்வுக்கு மாற்றக்கோரி தலைமை நீதிபதிக்கு இரு நீதிபதிகள் அமர்வு பரிந்துரை செய்தது. தொடர்ந்து இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.

நீதிபதி பி.ஆர் கவாய், எஸ்.எஸ் போபண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. நீதிமன்ற நேரம் முடிந்தும் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில், சிறப்பு வழக்காக கருதி இரவு வரை நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த் நீதிபதிகள் குஜராத உயர் நீதிமன்றத்தில் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கினர். மேலும் இந்த வழக்கில் சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட்டுக்கு ஒரு வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.

இதையும் படிங்க : வந்தே பாரத் ரயிலை இழுத்துச் சென்ற மின்சார ரயில் என்ஜின்... வைரல் வீடியோவுக்கு இந்திய ரயில்வே விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.