ஹைதராபாத்: இந்திய அரசின் விண்வெளி நிறுவனம் இஸ்ரோ உலக அளவில் தொடர்ச்சியாக இரண்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. தற்போது இஸ்ரோ உலகளாவிய வணிக நோக்கிலான செயல்பாடுகள் குறித்து தனது கவனத்தை செலுத்தியுள்ளது. இஸ்ரோ நேற்று (செப்.2) தனது முதல் விண்வெளி சோலார் மிஷன் ஆதித்யா எல்1 ராக்கெட் PSLV-C வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
இதற்கு முன்னதாக நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை வெற்றிகரமாக தரையிறக்கி மிகப் பெரிய சாதனையை பெற்றது. மேலும், நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்ட முதல் விண்கலம் என்ற பெருமையை சந்திரயான்-3 பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் நிலவில் விண்கலன்களை வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காம் இடம் பிடித்தது. நிலவின் மேற்பரப்பில் இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் விண்கலன்களை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது.
இஸ்ரோவின் கடந்த இரண்டு சாதனைகளும் வணிக நோக்கம் அற்றவை இவை அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மையமாக கொண்டது. ஆனால், இந்த இரண்டு வெற்றிகளும் உலக அளவிலான விண்வெளி சந்தையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மீது பொருளாதார ரிதியான நம்பகத்தன்மையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இஸ்ரோவின் வணிக நோ்க்கிலான செயல்பாடுகள் 400 பில்லியன் டாலர் ஆக இருக்கும் என எதிர்பாக்கப்படுகின்றன.
கடந்த ஜூலை 13ல் இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ 7 சிங்கப்பூர் செயற்கைக் கோள்களை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. சிங்கப்பூரை சேர்ந்த ST இன்ஜினியரிங் நிறுவனத்திற்காக இஸ்ரேல் அரசு 352 கிலோ எடை கொண்ட DS-SAR செயற்கைக்கோளை இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (IAI) உருவாக்கியது. இதனை இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ PSLV-C56 ராக்கெட் முலம் சரியான சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தியது மேலும், ஆறு சிறிய சிங்கப்பூர் செயற்கைக்கோள்களையும் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இந்தியாவின் விண்வெளி நிறுவனமான இஸ்ரோ 34 நாடுகளில் 431 செயற்கைக்கோள்களை விண்வெளியில் வெற்றிகரமாக நிலை நிறுத்தியுள்ளது. இதில், சிங்கப்பூர் செயற்கைக் கோள்களும் அடங்கும். இதன் முலம் இஸ்ரோ லாபகரமான விண்வெளி ஏவுதளம் என்ற நம்பகத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.
உலகளாவிய விண்வெளி சந்தை: செயற்கைக்கோள் உருவாக்கம் மற்றும் ஏவுதல் சேவைகளை கொண்ட விண்வெளித்துறை 2021ஆம் ஆண்டில் இதன் மதிப்பு சுமார் 380 பில்லியன் டாலர் ஆக இருக்கும் எனவும், குறிப்பாக 2040 ஆண்டு இவை 1 டிரில்லியனாக கணக்கிடப்பட்டுள்ளது என சிட்டி பேங்க் மற்றும் மோர்கன் ஸ்டான்லி போன்ற நிதி நிறுவனங்கள் நடத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளன.
இந்தியா விண்வெளியில் தொடர்ந்து பல சாதனைகள் செய்திருந்தாலும் உலகளாவிய விண்வெளித் துறையில் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதில், குறிப்பாக அமெரிக்காவின் நாசா, ஜரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ESA) மற்றும் ஜப்பான் ஜாக்சா போன்ற அரசு நிறுவனங்கள் உள்ளது.
மேலும் போயிங், லாக்ஹீட் மார்ட்டின், ரேதியோன் டெக்னாலஜிஸ், பிரெஞ்சு நிறுவனமான தேல்ஸ் மற்றும் இஸ்ரேல் ஐஏஐ (IAI) போன்ற தனியார் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் நாட்டின் அரசு மற்றும் தனியார் செயற்கைக்கோள் உருவாக்கும் சந்தையில் Elon Musk's Space-X போன்ற நிறுவனங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்தியாவுக்கு 100 பில்லியன் டாலர் வாய்ப்பு: இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ பல சாதனைகள் செய்து இருந்தாலும் உலக விண்வெளி சந்தையில் 2 சதவீத சந்தை பங்குகள் மட்டுமே கொண்டுள்ளன. இந்தியாவின் உள்நாட்டு விண்வெளித் தொழில் சுமார் 8 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் 2 சதவீதம் உலக அளவில் வளர்ச்சி அடையும் ஆனால் தற்போது, 4 சதவீதம் கூடுதல் வளர்ச்சி விகிதத்தில் வளர்ச்சி பெற்றுள்ளன.
இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ(Isro) இந்த வருடத்தின் இறுதிக்குள் உலகளாவிய வர்த்தக விண்வெளி சந்தையை 10 சதவீதமாக உயர்த்துவதற்கான இலக்கை கொண்டு செயல்படுகின்றன. ஆர்தர்.டி.லிட்டில் என்ற ஆலோசனை நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, உலக விண்வெளி சந்தையில் இந்தியா தற்போது எதிர்பார்த்ததை விட அதிக சந்தைப் பங்கை அடைய முடியும் என்று கூறுகின்றன. மேலும் இஸ்ரோ வணிக விண்வெளி சந்தையில் நாட்டிற்கான சிறந்த பிராண்ட் தூதராக தனித்து நிற்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் விண்வெளி வளர்ச்சிக்காக 2019ஆம் ஆண்டு நியூஸ் பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) உருவாக்கி ஏவுகனை வாகனம் மற்றும் செயற்கைக்கோள் தயாரிப்பு விண்வெளி துறையில் தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கு நிறுவப்பட்டது. இது தனியார் துறைக்கு முக்கிய பங்கினை வழங்கி வருகின்றன. இதன் முலம் சில தகவல்களின் அடிப்படையில், சந்திரயான் - 3 விண்வெளிக்கு எடுத்துச் சென்ற இந்தியாவின் ராக்கெட்டின் கிட்டத்தட்ட 85% பாகங்கள் தனியார் துறைகளிடம் இருந்து பெறப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளன.
முன்னேற்ற பாதையில் பயணம்: குறைந்த செலவின் தரமான செயற்கைக்கோள் தயாரிப்பு, உதிரிபாகங்கள் வழங்குவது மற்றும் ஏவுதள சேவைகளை வழங்கி உலக தர வரிசையில் மிக முக்கிய இடமாக இருக்க வேண்டும் என்பதை நோக்கமாக இந்தியா கொண்டுள்ளது. இருந்த போதும் விண்வெளித் துறையில் சில அடிப்படை கட்டமைப்பு இல்லாமல் உள்ளது. நாட்டில் உள்ளுர் சிறு நிறுவனங்களை ஊக்குவிப்பதன் மூலம் மாற்றம் அடைய முடியும் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.
இதையும் படிங்க: Special Session of Parliament: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் சிறப்பு என்ன? எதிர்க்கட்சிகளுக்கு காத்திருக்கும் சவால்!