மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை டிசம்பர் 30ஆம் தேதி பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இது நாட்டின் ஏழாவது வந்தே பாரத் ரயில் ஆகும். ஹவுராவில் இருந்து நியூ ஜல்பாய்குரி வரை இந்த எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும்.
இந்த சேவை தொடங்கப்பட்டு நான்கு நாள்களான நிலையில், நேற்று (ஜனவரி 3) வந்தே பாரத் ரயில் மால்டா பகுதியில் சென்றுகொண்டிருந்த போது அப்பகுதியில் இருந்த மர்ம நபர்கள் சிலர் ரயிலின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில், ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. ரயிலின் வெளிப்புறங்களும் பலத்த சேதம் அடைந்தன. எனினும், நல்வாய்பாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த கல்வீச்சு சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக அதே பகுதியில் கல்வீச்சு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படங்க: பெண் காவலரிடம் அத்துமீறிய திமுக நிர்வாகிகள் கைது.! கட்சியில் இருந்து இடைநீக்கம்..