ETV Bharat / bharat

உலக சாதனை படைத்த பெங்களூரு கெம்பேகவுடா சிலை...! - Kempegowda statue world record

பெங்களூருவில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக உயரமான கெம்பேகவுடா வெண்கல சிலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.

உலக சாதனை படைத்த பெங்களூரு கெம்பேகவுடா சிலை

author img

By

Published : Nov 10, 2022, 11:13 AM IST

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கெம்பேகவுடாவின் 108 அடி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.

முந்தைய விஜயநகரப் பேரரசின் கீழ் ஒரு நிலப்பிரபுத்துவ ஆட்சியாளரான கெம்பேகவுடா 1537-ம் ஆண்டு பெங்களூருவை நிறுவினார். பெங்களூர் நகரத்தை உருவாக்கிய கெம்பேகவுடாவை நினைவுகூறும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. "செழிப்பின் சிலை" என்று அழைக்கப்படும் இந்த சிலை சுமார் 220 டன் எடை கொண்டது. இந்த சிலையில் 4 டன் எடையுள்ள வாள் உள்ளது.

இந்நிலையில் இந்த கெம்பேகவுடா சிலை ”ஒரு நகரத்தை நிறுவியவரின் முதல் மற்றும் உயரமான வெண்கலச் சிலை" என்ற உலக சாதனையை படைத்துள்ளது. இதுகுறித்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தனது ட்விட்டர் பக்கத்தில், ”108 அடி உயரத்தில் நிற்கும் இந்த சிலை, உலகளாவிய நகரத்தின் அவரது(கெம்பேகவுடா ) பார்வையை குறிக்கிறது" என 'உலக சாதனை புத்தகத்தின்' சான்றிதழுடன் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பிரதமர் கூட்டத்திற்கு மாணவர்கள் கட்டாயம்.. திடீரென பின்வாங்கிய கர்நாடக அரசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.