புதுச்சேரி மாநில சட்டம் ஒழுங்கு தொடர்பான முக்கிய ஆய்வுக் கூட்டம் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. கோரிமேடு காவலர் வளாகத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநில டிஜிபி பாலாஜி ஸ்ரீ வத்சவா, கூடுதல் டிஜிபி ஆனந்த மோகன், மாநகர முதுநிலை காவல் கண்காணிப்பாளர்கள் பிரதிக்ஷா கோத்ரா, அகன்ஷா யாதவ், ராகுல் அல்வால் மகேஷ்குமார் பங்கேற்றனர்.
மேலும், காவல் கண்காணிப்பாளர்கள் மாறன், ஜிந்தா கோதண்டராமன், சுபம் கோஷ், ரங்கநாதன் உள்ளிட்ட காவல் அலுவலர்கள், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள், காவலர்கள் என பலரும் இதில் பங்கேற்றனர்.
புதுவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், தற்போது நடைபெற்ற குற்றங்களை முழுமையாக ஒடுக்கவேண்டும் என்பது குறித்தும், சட்டம் ஒழுங்கை காவல்துறையின் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.
இதையும் படிங்க:பணத்தகராறில் தாய்மாமனை கொலை செய்த அண்ணன், தங்கை கைது!