ETV Bharat / bharat

Gujarat Election Result: காங்கிரஸுக்கு சவால் விடுகிறதா ஆம் ஆத்மி? - Gujarat Assembly Election Result 2022

குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸுக்கு சவால் விடும் நிலையை எட்டியுள்ளதாக தெரிகிறது.

Gujarat Election Result: காங்கிரஸுக்கு சவால் விடுகிறதா ஆம் ஆத்மி?

author img

By

Published : Dec 8, 2022, 2:28 PM IST

ஹைதராபாத்: குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி (பிற்பகல் 1.55 மணி), பாஜக 111 இடங்களில் வெற்றி பெற்று 43 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மேலும் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் 13 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

3 இடங்களில் வெற்றி அடைந்துள்ள ஆம் ஆத்மி, 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றும், 1 இடத்தில் முன்னிலை வகித்தும் வருகின்றன. கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் 77 இடங்களிலும், பாரதிய டிரைபல் கட்சி (BTP) 2 இடங்களும், என்சிபிக்கு ஒரு இடமும், சுயேச்சைகளுக்கு மூன்று இடங்களும் கிடைத்தன.

இதன் மூலம் 49.1 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக, தற்போது 53 சதவீத வாக்குகளாக தங்களை உயர்த்தியுள்ளது. ஆனால் காங்கிரஸின் வாக்கு வங்கி 41.4 சதவீதத்திலிருந்து 26.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதனால் காங்கிரஸின் வாக்கு விகிதம் கிட்டத்தட்ட 14.5 சதவீதம் குறைந்துள்ளது.

அதேநேரம் ஆம் ஆத்மி கட்சி, 2017 தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்தது. ஆனால் தற்போது 12.9 சதவீத வாக்குகளை ஆம் ஆத்மி கட்சி பெற்றுள்ளது. இதனால் காங்கிரஸின் வாக்கு வங்கியை ஆம் ஆத்மி பிரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இது அடுத்த சட்டசபைத் தேர்தலில் அடுத்த இலக்கை ஆம் ஆத்மி கட்சிக்குக் கொடுக்கும் என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும் கடந்த ஐந்தாண்டுகளில் காங்கிரஸ் தொகுதிகளில் வெற்றி பெற்ற 20 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு மாறியதை அடுத்து, அவர்களில் 3 பேர் தேர்தலுக்கு முன்னதாகவே விலகியதால், மக்களவையில் பாஜகவின் எண்ணிக்கை 110 ஆகவும், காங்கிரஸின் எண்ணிக்கை 60 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சாதனை மேல் சாதனை.. முன்னிலையால் குஷியான பாஜகவினர்...

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.