டெல்லி: நாடு முழுவதும் 76ஆவது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றிய பின் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். இதனிடையே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை மோடி அரசு சிறுமைப்படுத்துவதாக தெரிவித்தார்.
இதுகுறித்து சோனியா காந்தி கூறுகையில், "சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றிய கர்நாடக அரசின் செய்தித்தாள் விளம்பரத்தில் நாட்டின் முதல் பிரதமர் நேருவின் பெயர் இடம்பெறவில்லை. அதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் பல்வேறு அறிக்கைகள், திட்டங்களில் வரலாற்று உண்மைகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த மோடி அரசு அரசியல் ஆதாயங்களுக்காக நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் மகத்தான தியாகங்களையும், சாதனைகளையும் சிறுமைப்படுத்த முனைகிறது.
இந்தியா கடந்த 75 ஆண்டுகளில் அறிவியல், கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பல்வேறு திறமையானவர்களின் கடின உழைப்பால் முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் சிலர் மட்டுமே பிரதிநிதித்துவ படுத்தப்படுகிறார்கள். இதனை காங்கிரஸ் கண்டிக்கும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவில் 5G காத்திருப்பு முடிந்துவிட்டது... பிரதமர் மோடி...