ETV Bharat / bharat

மும்பையில் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு - மும்பை கட்டிட விபத்து

மும்பை மாநிலம் தானே மாவட்டத்தில் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், 12 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

4 people die in Maharashtra's Ulhasnagar as building slabs collapse
மும்பையில் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: 4பேர் உயிரிழப்பு
author img

By

Published : May 15, 2021, 9:31 PM IST

மும்பை: மும்பை மாநிலம், தானே மாவட்டத்திலுள்ள உல்ஹாஸ்நகர் பகுதியில் மோகினி அரண்மனைக் கட்டடம் அமைந்துள்ளது. அக்கட்டடத்தின் நான்காவது மாடியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், மிலின்ட் பார்ஷே(12), ஐஸ்வர்யா ஹரிஸ் டோட்வால்(23), ஹரிஸ் டோல்வால்(40), சாவித்திரி பார்ஷே(60) உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட மீட்புப்படையினர்

இந்த விபத்து குறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தானே மாவட்ட மீட்புப்படையினர் 11 பேரை இடிபாடுகளில் இருந்து மீட்டனர்.

இந்த மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மைத் துறையைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டனர். தற்போது, இடிபாடுகளில் சிக்கியுள்ள சந்தியா டோட்வால் என்ற பெண்ணை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: சூரத்தில் கட்டுமானம் சரிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.