கோட்டயம்: பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பாதிரியார் பிரான்கோ முல்லக்கல் விடுதலை பெற்ற பிறகு நமது ஈடிவி பாரத்திற்கு பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக இருக்கும் மற்றொரு கன்னியாஸ்திரி பேட்டியளித்தார். அதில், “நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை.
எங்களின் சிஸ்டருக்கு (கன்னியாஸ்திரி) நியாயம் கிடைக்கும்வரை நாங்கள் போராடுவோம். இதற்கு முன்னரும் எங்களுக்குத் தொல்லை கொடுத்தார்கள், இனியும் கொடுப்பார்கள். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் இறுதிவரை எங்கள் சிஸ்டருடன் உறுதுணையாக இருப்போம்” எனத் தெரிவித்தார்.
போதிய ஆதாரங்களைக் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராகத் தர தவறியதால் நீதிமன்றம் பாதிரியார் பிரான்கோ முல்லக்கல்லை (57) விடுவிக்குமாறு நீதிபதி ஜி. கோப்பக்குமார் தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பை அடுத்து பாதிரியார் ஆனந்த கண்ணீர் விடுத்து அழுது, கடவுளுக்கு நன்றி சொன்னார். உண்மையின் மீது தான் வைத்த நம்பிக்கை நிலைநாட்டப்பட்டதாகவும் தெரிவித்தார்.
ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு வாய்தாவிற்குப் பின்னர் இவ்வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. இவ்வழக்கின் தொடக்கமாக, பிரான்கோ முல்லக்கல் மீது கன்னியாஸ்திரி ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2018இல் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மயக்கமடைந்த மூதாட்டி: டாக்டராக மாறிய ஆளுநர் அடடே!