ETV Bharat / bharat

“தமிழகத்திற்கு திறக்க தண்ணீர் இல்லை” - காவிரி விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர்! - அனைத்துக் கட்சி கூட்டம்

Karnataka CM Siddaramaiah about Cauvery issue: தமிழ்நாட்டிற்கு திறந்து விட தண்ணீர் இல்லை என காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவில் கூறி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ANI

Published : Sep 13, 2023, 4:13 PM IST

பெங்களூரு (கர்நாடகா): தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கக் கோரி காவிரி ஒழுங்காற்று குழு நேற்று பரிந்துரை செய்தது. இதனையடுத்து இது தொடர்பாக ஆலோசனை நடத்த, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று (செப் 13) நடைபெற்றது.

  • ಮುಖ್ಯಮಂತ್ರಿ @siddaramaiah ಅವರು ವಿಧಾನಸೌಧದ ಸಮ್ಮೇಳನ ಸಭಾಂಗಣದಲ್ಲಿ ಕಾವೇರಿ ಜಲ ವಿವಾದ ಕುರಿತಂತೆ ಸರ್ವಪಕ್ಷಗಳ ತುರ್ತು ಸಭೆ ನಡೆಸಿ ಚರ್ಚಿಸಿದರು.
    ಸಭೆಯಲ್ಲಿ ಉಪ ಮುಖ್ಯಮಂತ್ರಿ @DKShivakumar, ಸಚಿವರಾದ @DrParameshwara, @HKPatilINC, ಚೆಲುವರಾಯಸ್ವಾಮಿ, ಕೆ.ಹೆಚ್. ಮುನಿಯಪ್ಪ, ಕೆ.ಎನ್. ರಾಜಣ್ಣ, @NsBoseraju, ಕೆ.ವೆಂಕಟೇಶ್‌,… pic.twitter.com/2llDuvQM6w

    — CM of Karnataka (@CMofKarnataka) September 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சித்தராமையா, “காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவில் மீண்டும் தண்ணீர் இல்லை எனக் கூறி கர்நாடகாவிலும், தமிழ்நாட்டிலும் நிலவும் உண்மை நிலையை விளக்கி மீண்டும் மனுத் தாக்கல் செய்வோம் என இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுத்து உள்ளோம்.

  • #WATCH | Bengaluru: Karnataka CM Siddaramaiah says, "We have taken a decision in the All-Party Meeting that we will make an application before the Cauvery River Regulatory Committee again stating that we have no water and explaining the actual position which is prevailing in… pic.twitter.com/zeRQkcuEUC

    — ANI (@ANI) September 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மனு உடன் உச்ச நீதிமன்றத்தை அணுகவும் முடிவு செய்து உள்ளோம். எனவே, தயவுசெய்து தூதுக்குழுவில் வருகிறோம் என்று பிரதமருக்கும், நீர்வளத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதவும் முடிவு எடுத்து இருக்கிறோம். ஆகையால், எங்களுக்கு ஒரு தேதி கொடுங்கள். டெல்லி சென்று அங்கு உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த அமைச்சர்களைச் சந்திக்க ஆலோசனை செய்து வருகிறோம்” என தெரிவித்தார்.

  • Chennai | Tamil Nadu Water Resources Minister Durai Murugan says, "The Cauvery Water Management Committee meeting was held yesterday and it was decided to release 5000 cusecs of water for another 15 days but we have to see what the Karnataka government says...We will definitely… pic.twitter.com/BhoLtqeRlS

இந்த நிலையில், இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், “நேற்று காவிரி நதிநீர் மேலாண்மை குழுக் கூட்டம் கூடி, தமிழ்நாட்டிற்கு இன்னும் 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டது. ஆனால் கர்நாடக அரசு என்ன சொல்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டின் விவசாயிகளை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்” என தெரிவித்து உள்ளார்.

முன்னதாக, காவிரி விவகாரத்தில் கடந்த ஒரு மாத காலத்திற்குள் கர்நாடகாவில் அனைத்துக் கட்சிகள் கூட்டம் இரண்டாவது முறையாக நடைபெறுகிறது. இதற்கு முன் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க விடக் கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், நேற்று (செப்.12) சித்தராமையா தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் டிகே சிவகுமார், அம்மாநில விவசாயத்துறை அமைச்சர் சலுவரையா சுவாமி உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டு காவிரி கையிருப்பு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதையும் படிங்க: உதயநிதி சனாதன விவகாரம்.. நாக்கை அறுத்து, கண்களை பிடுங்கி எறிவோம்... சர்ச்சையை கிளப்பும் மத்திய அமைச்சரின் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.