ETV Bharat / bharat

மளிகை கடைக்காரர் கொலை: ஃப்ரீசரில் உடல் கண்டெடுப்பு - Shopkeeper dead body in deep freezer

கான்பூர் அருகே ஃப்ரீசரில் மளிகை கடைக்காரர் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஃப்ரீசரில் மளிகை கடைக்காரர் உடல் கண்டெடுப்பு

author img

By

Published : Nov 14, 2022, 9:07 AM IST

கான்பூர்: பித்னு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காதேஷ்வர் கிராமத்தைச் சேர்ந்தவர் குபேர் சிங் (52). இவர் அப்பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளார். குபேர் சிங்கின் மனைவி 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அவர் திருமணமான மகளின் வீட்டிற்கு அருகே வசித்து வந்தார். வேலையின் காரணமாக மருமகன் வெளியூர் சென்று விட்டார்.

கடந்த 4 நாட்களாக குபேர் சிங் மளிகைக் கடையைத் திறக்காததால், அப்பகுதி மக்கள் குபேர் சிங்கின் மகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவரது மகள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, ​​குபேர் சிங்கின் உடல் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடயவியல் குழுவை வரவழைத்து விசாரணை நடத்தினர். இந்த கொலை வழக்கில் தடயங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என எஸ்.பி. தேஜ் ஸ்வரூப் சிங் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முர்முவை உருவ கேலி செய்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவருக்கு வலுக்கும் எதிர்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.