ETV Bharat / bharat

மஹாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் - அசாம் பறந்த 41 எம்எல்ஏக்கள்... - மகாராஷ்டிரா அரசு கவிழுமா

மஹாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், 41 எம்எல்ஏக்கள் அசாம் சென்றனர்.

ஏக்நாத் ஷிண்டே, eknath shinde
ஏக்நாத் ஷிண்டே
author img

By

Published : Jun 22, 2022, 9:44 AM IST

கௌகாத்தி: மகாராஷ்டிரா சட்ட மேலவையில் காலியாக இருந்த 10 இடங்களுக்கான தேர்தல் நேற்று முன்தினம் (ஜூன் 20) நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் 5 வேட்பாளர்களும், ஆளும் சிவசேனா கூட்டணி சார்பில் 6 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

அதில் பாஜகவின் ஐந்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. பாஜகவின் வெற்றி ஆளும் சிவசேனாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கட்சி மாறி வாக்களிப்பு: அதற்கு காரணம், மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 106 எம்எல்ஏக்களை மட்டுமே கொண்டுள்ள பாஜகவுக்கு ஆதரவாக 133 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, சுமார் 28 எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்ததாக தெரிகிறது. சிவசேனாவின் 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக பரபரப்பு தகவல் வெளியானது. இந்தச் சம்பவம் மகாராஷ்டிரா அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சூரத்தில் தலைமறைவு: இதைத்தொடர்ந்து, சிவசேனாவின் மூத்த தலைவரும், மகாராஷ்டிராவின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே உட்பட 11 எம்எல்ஏக்கள் நேற்று காலை முதல், தொலைத்தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தனர். அவர்களை போலீசார் தேடி வரும் நிலையில், அனைவரும் குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. எம்எல்ஏக்களை ஈர்ப்பதற்காக பாஜக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

பாஜக உடன் கூட்டு...?: தொடர்ந்து, மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, சிவசேனா தலைவர்கள் மிலிந்த் நர்வேகர், ரவீந்திர பத்தக் உள்ளிட்டோர் நட்சத்திர ஹோட்டலில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர். மேலும், ஏக்நாத் ஷிண்டே, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உடன் தொலைபேசி வாயிலாக உரையாடியதாகவும் கூறப்படுகிறது. அப்போது, உடனே மும்பை திரும்பும்படி முதலமைச்சர் ஷிண்டேவிடம் வலியுறுத்தியதாகவும், பாஜக உடன் கூட்டணி வைக்க இதுவே தகுந்த சமயம் என்று ஷிண்டே கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூரத் டூ கௌகாத்தி: சூரத், மும்பைக்கு அருகே உள்ளது என்பதால் சிவசேனா தொண்டர்களால் ஏதேனும் ஆபத்து வரலாம் என்ற நோக்கில் எம்எல்ஏக்கள் அனைவரும் கௌகாத்தி செல்ல திட்டமட்டிருப்பதாக நேற்றிரவு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே உள்பட 34 சிவேசேனா எம்எல்ஏக்கள், 7 சுயேச்சை எம்எல்ஏக்கள் என மொத்தம் 41 பேர் இன்று (ஜூன் 22) காலை கௌகாத்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தனர்.

ரேடிசன் ப்ளூவில் எம்எல்ஏக்கள்: அப்போது, செய்தியாளரை சந்தித்த ஏக்நாத்,"நாங்கள் பால் தாக்கரேவின் சிவசேனாவில் இருந்து நாங்கள் விலகவில்லை, விலகவும் மாட்டோம். பாலாசகேப்பின் இந்துத்துவத்தை நாங்கள் பின்பற்றுகிறோம், அதன்படியே செயல்படுவோம். இங்கு என்னுட ன் சேர்த்து 41 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள், நாங்கள் பால்தக்கரேவின் இந்துத்துவத்தை தூக்கிச்சுமப்போம்" எனத் தெரிவித்தார். தற்போது, எம்எல்ஏக்கள் அனைவரும் ரேடிசன் ப்ளூ நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கவிழுமா சிவசேனா அரசு...?: மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மகா விகாஷ் கூட்டணி என்ற பெயரில் 2019ஆம் ஆண்டு ஆட்சியமைத்தது. மொத்தமுள்ள 288 எம்எல்ஏக்களில், பாஜக 106 எம்எல்ஏக்கள் இருந்தாலும், போதிய பெரும்பான்மை இல்லாமல் அக்கட்சியால் ஆட்சியமைக்க முடியவில்லை. மேலும், தற்போது இந்த 41 எம்எல்ஏக்கள் சிவசேனா தலைமையிலான அரசுக்கு தங்களின் ஆதரவினை விலக்கிக்கொள்ளும்பட்சத்தில், உத்தவ் தாக்ரே அரசு கவிழும் நிலைக்கு தள்ளப்பட வாய்ப்புள்ளது. சிவசேனா 56 எம்எல்ஏக்களை பெற்றிருந்த நிலையில், 34 பேர் தற்போது கௌகாத்தி சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் - அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உட்பட 11 எம்எல்ஏக்கள் சூரத் நட்சத்திர ஹோட்டலில் தங்கவைப்பு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.